- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அந்தர் பல்டி அடித்த நிலா... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அந்தர் பல்டி அடித்த நிலா... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் சோழனை திருட்டு கேஸில் இருந்து வெளியே எடுத்துள்ள அவரின் ஓனர், நிலாவால் தான் உன்னை வெளியே எடுத்தேன் என கூறி உள்ளார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai serial today episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில் நிலாவும் சோழனும் நேராக ஓனரின் ஆபிஸுக்கு செல்கிறார்கள். அங்கு சென்றதும் சோழன், ஓனரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, தான் பணத்தை திருடியது தப்பு தான், இனிமே இந்த தவறை செய்யமாட்டேன் என சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார். அதன்பின் மனம் இறங்கிய ஓனர், சோழனை அழைத்து, நீ இதுக்கப்புறம் ரெகுலரா வேலைக்கு வந்திரு, வராம மட்டும் இருந்திராத என சொல்கிறார். அதற்கு சோழன், எனக்கு வேலையெல்லாம் வேண்டாம்னே உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன் என கூறுகிறார்.
சோழனை மன்னித்த ஓனர்
ஏன்டா, இந்த வேலையை விட்டா, வேற எங்கடா போவ, ஒழுங்கு மரியாதையா வேலைக்கு வந்திரு என அன்புக்கட்டளையிடும் ஓனர், உன்னுடைய மனைவியும் வந்திருக்கா என கேட்கிறார். ஆமா அண்ணேன் வெளிய தான் உட்காந்திருக்கா என சோழன் சொல்ல, உன்னுடைய மனைவிக்காக தான பணத்தை திருடுன, உன் பொண்டாட்டி அவமானப்படக் கூடாதுனு நினைச்சு தான இதையெல்லாம் பண்ணுன. இப்போ நீ பண்ணுன வேலையால உன்னுடைய மனைவிக்கு எவ்வளவு அவமானம், உனக்காக என்கிட்ட வந்து கெஞ்சி, அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல வந்து கெஞ்சி கூத்தாடி உன்னை வெளிய எடுத்திருக்கு என கூறுகிறார்.
நிலா காலில் விழுந்த சோழன்
ஓனர் அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்த பின்னர், நிலாவும் சோழனும் அங்கிருந்து வீட்டுக்கு பொடிநடையாக நடந்து செல்கிறார்கள். அப்போது நிலா செய்த உதவிக்காக, நடுரோட்டில் வைத்தே அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் சோழன். உங்களை அவ்வளவு பிடிக்கும், உங்கள ராணி போல, வச்சு பாத்துக்கணும்னு நான் பண்றதெல்லாமே தப்பா போய் முடியுது. நான் ஏன் யோசிக்காம இதையெல்லாம் பண்ணுனேன்னு தெரியல என சொல்லி புலம்புகிறார். நிலா பெரிதாக அவரிடம் எதுவும் ரியாக்ட் பண்ணவே இல்லை. மறுபுறம் வீட்டில் உள்ளவர்கள் பயத்திலேயே இருக்கிறார்கள்.
நடேஷன் ஷாக்
சோழன் மீதுள்ள கோபத்தினால், நிலா வீட்டை விட்டு சென்றுவிடுவாரோ என்கிற பயத்தில் சேரன், பாண்டியன் ஆகியோர் இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் நிலாவும், சோழனும் வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். என்ன செய்யப்போகிறாரோ என எல்லாரும் அமைதியாக இருக்க, நிலா சோழனுக்காக பேச ஆரம்பிக்கிறார். இதைக்கேட்ட உடனே நடேஷனுக்கு பயங்கர ஷாக். என்னம்மா நீ வந்த உடனே பெருசா சண்டை போடுவ, வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொல்லுவனு நாங்கெல்லாம் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோம். நீ என்னடானா இவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிகிட்டு இருக்க என கேட்கிறார்.
புலம்பும் பல்லவன்
நிலாவே சோழனை மன்னித்துவிட்டதால், வீட்டில் உள்ள அனைவருமே சோழனை மன்னித்துவிடுகிறார்கள். ஆனால் பல்லவன், அண்ணேன் இவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கு, இதையே சேரன் அண்ணன் மன்னிச்சுட்டாங்க, அப்போ என்னைய மட்டும் ஏன் மன்னிக்க மாட்டேங்குறாங்க என பாண்டியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பாண்டியனும் பல்லவனுக்காக சென்று சேரனிடம் பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

