- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தலைகீழாக மாறிய டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்... சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி..!
தலைகீழாக மாறிய டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்... சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி..!
டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ள நிலையில், 52வது வாரத்தில் அதிக புள்ளிகளை பெற்ற தொடர்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இதில் எந்த சீரியலுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கிறது என்பது அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 52வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
10. சின்ன மருமகள்
விஜய் டிவியில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் சின்ன மருமகள். நவீன் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் 500 எபிசோடுகளைக் கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 10வது இடத்தை தக்க வைத்து உள்ளது. இந்த சீரியலுக்கு 6.44 ரேட்டிங் கிடைத்துள்ளது.
9. அன்னம்
சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அன்னம். அபி நட்சத்திரா ஹீரோயினாக நடித்து வரும் இந்த சீரியல், 340 எபிசோடுகளை கடந்து ஓராண்டுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 7-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதற்கு 8.08 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது.
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. 600 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.12 புள்ளிகள் உடன் 8-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
7. மருமகள்
சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மருமகள். இந்த சீரியல், இரண்டு ஆண்டுகளாக வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 4-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சரசரவென பின்னுக்கு தள்ளப்பட்டு 8.17 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.
6. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரமும் இந்த வாரமும் 6-ம் இடத்தில் நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 8.63 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
5. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் அதிரடியான திருப்பங்களுடன் கூடிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸ் தொடங்கியதால் சரிவில் இருந்த டிஆர்பி மீண்டும் முன்னேறத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 5-வது இடத்துக்கு முன்னேறியதோடு 8.65 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
4. கயல்
சைத்ரா ரெட்டி நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் கயல். 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் இந்த சீரியல் கடந்த வாரம் 9.04 புள்ளிகள் உடன் 3-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சற்று கம்மியாக... 8.69 ரேட்டிங் உடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
3. அய்யனார் துணை
விஜய் டிவியில் தூள் கிளப்பி வரும் சீரியல் என்றால் அது அய்யனார் துணை. தமிழில் ஹிட்டானதால் இந்த சீரியல் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சீரியல் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 9.04 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதன்முறையாக 3-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
2. மூன்று முடிச்சு
சன் டிவியில் கடந்த சில மாதங்களாக முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஸ்வாதி கொண்டே, நியாஸ் கான் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், இந்த வாரம் 9.84 டிஆர்பி ரேட்டிங் உடன் 2-ம் இடத்துக்கு சென்றுள்ளது.
1. சிங்கப்பெண்ணே
சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிங்கப்பெண்ணே. இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக மந்தமான கதைக்களத்தால் டிஆர்பியில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்தது. ஆனால் கதைக்களம் கொடைக்கானலுக்கு சென்ற பின்னர் மீண்டும் டிஆர்பியில் மளமளவென முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த சீரியலுக்கு 9.98 புள்ளிகள் கிடைத்துள்ளது.

