- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இவன் திருந்த மாட்டான்... சோழனின் செயலால் கடும் அப்செட்டில் நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
இவன் திருந்த மாட்டான்... சோழனின் செயலால் கடும் அப்செட்டில் நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் எவ்வளவு சொல்லியும் திருந்தாத சோழன் மீண்டும் பெண்களிடம் வேலையை காட்ட அதை சேரனும், நிலாவும் பார்த்து அப்செட் ஆகிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், சோழன் இன்னும் திருந்தாததால், எல்லோருமே சோழன் மீது செம கோபத்தில் இருக்கிறார்கள். அதிலும் சேரன், கோபத்தில் சோழனை பிடித்து திட்டுகிறார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்த உடன் நிலா எல்லாருக்குமே டீ போட்டு கொடுக்கிறார். ஆனால் சோழனுக்கு மட்டும் கொடுக்கவில்லை. நடேசனுடனும் நிலா நன்றாக பேசுவதை பார்த்துவிட்டு, இவர் கூட நல்லா பேசுறாங்க, ஆனால் என்னை மட்டும் யாருமே மதிப்பதில்லை என புலம்புகிறார் சோழன். இதையடுத்து சேரன் அனைவரையும் கோவிலுக்கு அழைத்து செல்கிறார்.
சோழனிடம் சத்தியம் வாங்கும் சேரன்
முதலில் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி சோழன் வர மறுக்க, கட்டாயம் நீ வந்தே ஆக வேண்டும் என சேரன் சொன்னதும் வேறுவழியின்றி கோவிலுக்கு செல்கிறார் சோழன். சேரன் இவர்கள் அனைவரையும் கோவிலுக்கு அழைத்து சென்றதே சோழனுக்காக தான். அவர் அங்கு சாமி முன்னாடி சூடம் ஏற்றி, காயத்ரிகிட்ட அப்படி நடந்துகொண்டது தப்பு, இதுக்கப்புறம் இனி காரில் ஏறும் பெண்களிடம் தப்பாக பேசமாட்டேன். கல்யாணம் ஆன உண்மையை யாரிடமும் மறைக்க மாட்டேன்னு இந்த சூடத்தில் அடித்து சத்தியம் பண்ணு என சேரன் சொல்ல, சோழன் ஷாக் ஆகிறார்.
மீண்டும் வேலையை ஆரம்பித்த சோழன்
பின்னர் வேறுவழியின்றி சத்தியம் பண்ணுகிறார் சோழன். அப்போது அந்த கோவிலுக்கு வந்த ஒரு பெண், தேங்காய் உடைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த சோழன், அந்த பெண்ணுக்கு உதவ முடிவெடுக்கிறார். மற்றவர்கள் கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் கோவிலை சுற்றி வருகிறார்கள். ஆனால் சோழன் மட்டும் அந்த பெண்ணிடம் சென்று வழ வழவென பேச ஆரம்பிக்கிறார். என்னங்க தேங்காவ உடைக்க முடியலையா, இங்க குடுங்க, தேங்காவை இப்படி உடைக்க கூடாது. இப்படி புடிச்சு உடைக்கணும் என கிளாஸ் எடுக்கிறார் சோழன்.
கோபத்தில் நிலா
பாருங்க உங்க கை பிஞ்சு கையா இருக்கு, அதான் உங்களால சரியா தேங்காய் உடைக்க முடியல என அவர் கையை தொட்டு வழிஞ்சு வழிஞ்சு பேசிக்கொண்டிருக்கிறார் சோழன். அந்த பெண்ணின் கையை பிடித்து சோழன் பேசிக் கொண்டிருப்பதை சேரனும், நிலாவும் பார்த்துவிடுகிறார்கள். சத்தியம் பண்ணி கொஞ்ச நேரம் கூட ஆகல திரும்பவும் ஆரம்பிச்சிட்டான். இவனெல்லாம் திருந்தவே மாட்டான் என சொல்லும் நிலா, கடும் அப்செட்டில் அங்கிருந்து கிளம்புகிறார். இதையடுத்து என்ன ஆனது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

