- Home
- டெக்னாலஜி
- Smartwatch Tech: ஸ்மார்ட்வாட்ச் பின்னாடி பச்சை லைட் ஏன் எரியுது? ஸ்டைல்னு நினைச்சீங்களா? இதுதான் காரணம்!
Smartwatch Tech: ஸ்மார்ட்வாட்ச் பின்னாடி பச்சை லைட் ஏன் எரியுது? ஸ்டைல்னு நினைச்சீங்களா? இதுதான் காரணம்!
Smartwatch Tech: உங்க ஸ்மார்ட்வாட்ச் பின்னாடி அடிக்கடி பச்சை லைட் எரிஞ்சு அணையுதா? அது வெறும் டிசைன் இல்லை, அதுக்கு பின்னாடி ஒரு முக்கியமான மருத்துவ அறிவியல் தொழில்நுட்பம் இருக்கு. இது குறித்து பார்ப்போம்.

ஸ்மார்ட்வாட்ச் பின்னாடி பச்சை லைட் ஏன் எரியுது?
ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பா இதைக் கவனித்திருப்பீர்கள். வாட்ச்சை கையிலிருந்து கழட்டியதும், அதற்குப் பின்னாடி ஒரு பச்சை லைட் விட்டு விட்டு எரியும். நிறைய பேர் இது ஏதோ கம்பெனி டிசைன் அல்லது சார்ஜிங் இண்டிகேட்டர் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த சின்ன பச்சை ஒளிதான் உங்கள் ஸ்மார்ட்வாட்ச்சின் மிக முக்கியமான பகுதி. உங்கள் ஹார்ட் ரேட், பல்ஸ், ரத்தத்தில் இருக்கிற ஆக்சிஜன் அளவு எல்லாவற்றையும் கணக்கிடுவதே இந்த லைட்தான்.
பிபிஜி (PPG) சென்சார்
இந்த டெக்னாலஜிக்குப் பேரு பிபிஜி (PPG) சென்சார். இதோட முழுப்பெயர் போட்டோபிளெதிஸ்மோகிராஃபி. ஒளி எப்படி பிரதிபலிக்கிறது என்பதை வைத்துதான் இந்த டெக்னாலஜி வேலை செய்கிறது. நமது ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கக் காரணம், அதில் இருக்கிற ஹீமோகுளோபின். இந்த ஹீமோகுளோபின், பச்சை நிற ஒளியை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டது. ஸ்மார்ட்வாட்ச் பின்னாடி இருக்கிற பச்சை எல்.இ.டி (LED) லைட் எரியும்போது, அந்த ஒளி உங்கள் சருமத்தைத் தாண்டி ரத்தக் குழாய்கள் மேல் படுகிறது.
இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும்போது, ரத்த ஓட்டம் அதிகமாகி, பச்சை ஒளி அதிகமாக உறிஞ்சப்படும். அதே சமயம், இதயம் ரத்தத்தை உள்ளிழுக்கும்போது, ஒளி குறைவாக உறிஞ்சப்பட்டு, அதிகமாக பிரதிபலித்து சென்சாருக்குத் திரும்ப வரும். இப்படி ஒளி உறிஞ்சப்படுவதற்கும், பிரதிபலிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துதான் உங்கள் வாட்ச் ஹார்ட் பீட்டைக் கணக்கிடுகிறது.
இதுதான் காரணம்
இப்போது ஒரு கேள்வி வரலாம், ஏன் சிவப்பு அல்லது நீல நிற லைட்டைப் பயன்படுத்தாமல், பச்சை லைட்டைப் பயன்படுத்துகிறார்கள்? இதற்கு இரண்டு முக்கிய காரணம் இருக்கு. முதல் காரணம், பச்சை நிற ஒளியின் அலைநீளம் (wavelength) நமது ரத்தத்தில் இருக்கிற சிவப்பு நிறத்தால் நன்றாக உறிஞ்சப்படும். அதனால், ஹார்ட் ரேட்டை அளவிடும்போது ரொம்பத் துல்லியமான ரிசல்ட் கிடைக்கும்.
இரண்டாவது காரணம், பச்சை ஒளி சருமத்துக்குள்ள ரொம்ப ஆழமாகப் போகாது. இதனால, நாம் நடக்கும்போதோ, கைகளை அசைக்கும்போதோ சென்சார் டேட்டாவை இழக்காது. ஆனால், சிவப்பு அல்லது இன்ஃப்ராரெட் ஒளி சருமத்துக்குள்ள ரொம்ப ஆழமாகப் போகும். இதனால நடக்கும்போது ஏற்படுற அசைவுகளால தப்பான ரிசல்ட் வர வாய்ப்பிருக்கு. அதனால்தான், ஃபிட்னஸ் டிராக்கிங்கிற்கு பச்சை நிற ஒளிதான் பெஸ்ட்.
இதயத்தை பார்த்துக் கொள்ளும்
ஆனால், இந்த லைட் எல்லா நேரமும் எரிந்தால் உங்கள் வாட்ச்சில் ஏதோ கோளாறு என்று அர்த்தம் இல்லை. நீங்கள் வாட்ச்சை கையில் கட்டியிருக்கும்போது, அது சில வினாடிகளுக்கு ஒருமுறை உங்கள் ஹார்ட் ரேட்டை செக் பண்ணிக்கொண்டே இருக்கும். நீங்கள் வொர்க்அவுட் மோட் ஆன் செய்யும்போது, ஒவ்வொரு இதயத் துடிப்பையும் கணக்கிட இந்த லைட் இன்னும் வேகமாக எரிய ஆரம்பிக்கும். அதனால், அடுத்த முறை இந்தப் பச்சை லைட்டைப் பார்த்தால், உங்கள் வாட்ச் உங்கள் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

