MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சாதனங்கள்
  • 53 மணி நேர பேட்டரி: டூயல் டிரைவர் முதல் நெக் ஹெல்த் அலர்ட் வரை; டெக் உலகை மிரட்ட வரும் ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4!

53 மணி நேர பேட்டரி: டூயல் டிரைவர் முதல் நெக் ஹெல்த் அலர்ட் வரை; டெக் உலகை மிரட்ட வரும் ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4 (OnePlus Buds Pro 4) பிளாக்ஷிப் TWS இயர்பட்ஸின் அம்சங்களை அறிமுகத்திற்கு முன்னதாகவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

3 Min read
Author : Kiruthickraj D
Published : Nov 03 2026, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4
Image Credit : X

ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4

ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை முதன்மை (Flagship) டிடபிள்யூஎஸ் (TWS) இயர்பட்ஸ் மாடலான 'ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4'-ன் விவரங்கள் மற்றும் அம்சங்களை, அதன் அறிமுகத்திற்கு முன்னதாகவே தனது உலகளாவிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கின் பிரபல ஆடியோ நிறுவனமான 'டைனாடியோ' (Dynaudio) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், டூயல்-டிரைவர் செட்டப், அடாப்டிவ் ஏ.என்.சி (Active Noise Cancellation), எல்ஹெச்டிசி 5.0 (LHDC 5.0) ஆடியோ ஆதரவு மற்றும் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 53 மணி நேர பேட்டரி லைஃப் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், லைவ் மொழிபெயர்ப்பு (AI Live Translation) உள்ளிட்ட பல ஏ.ஐ (AI) அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆடியோ & ஒலி தரம் (Sound & Audio)
Image Credit : X

ஆடியோ & ஒலி தரம் (Sound & Audio)

டிரைவர் செட்டப்: 11 மிமீ காம்போசிட் வூஃபர் (Woofer) மற்றும் 6 மிமீ பிளானர் டுவீட்டர் (Planar Tweeter) கொண்ட டூயல்-டிரைவர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை தனித்தனி டூயல் DAC-கள் மூலம் இயங்குகின்றன.

டைனாடியோ தொழில் நுட்பம் - 30-அடுக்கு செராமிக்-மெட்டல் டயாஃப்ரத்துடன் கூடிய டூயல்-மேக்னட் டைனமிக் டிரைவர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய 'பட்ஸ் புரோ 3' மாடலை விட 50% கூடுதல் பேஸ் (Bass) திறனை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

ஹை-ரெஸ் ஆடியோ - LHDC 5.0 ஆதரவுடன் 24-bit/192kHz ஆடியோ பிளேபேக் மற்றும் 1Mbps வரையிலான பிட்ரேட்டை இது ஆதரிக்கும்.

கோல்டன் சவுண்ட் & ஸ்பேஷியல் ஆடியோ - தலை அசைவைக் கண்காணிக்கும் (Head Tracking) ஸ்பேஷியல் ஆடியோ வசதி உள்ளது. மேலும் 'கோல்டன் சவுண்ட்' (Golden Sound) அம்சம் பயனரின் காது அமைப்புக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

35
இரைச்சல் நீக்கம் & ஏ.ஐ அம்சங்கள் (ANC & AI Features)
Image Credit : X

இரைச்சல் நீக்கம் & ஏ.ஐ அம்சங்கள் (ANC & AI Features)

அடாப்டிவ் ஏஎன்சி: சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப இரைச்சலைக் குறைக்கும் 'Adaptive ANC' வசதி இதில் உள்ளது. இது 'பட்ஸ் புரோ 3' மாடலை விட 2 மடங்கு அதிக பின்னணி இரைச்சலையும், 2.5 மடங்கு சிறந்த குரல் இரைச்சல் நீக்கத்தையும் (Voice Noise Reduction) தரும்.

மைக்குகள் - ஒவ்வொரு இயர்பட்டிலும் 3 மைக்குகள், விபியூ (VPU) போன்-கண்டக்ஷன் சென்சார் மற்றும் தெளிவான அழைப்புகளுக்கான ஏ.ஐ இரைச்சல் நீக்கத் தொழில்நுட்பம் உள்ளன.

ஏ.ஐ வசதிகள் - லைவ் மொழிபெயர்ப்பு (AI Live Translation) மற்றும் 'கிளியர் ஆடியோ ரெக்கார்டிங்' (Clear Audio Recording) ஆகிய வசதிகள் இதில் உள்ளன. ஏ.ஐ நேரலை மொழிபெயர்ப்பிற்கு ColorOS 17 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பில் இயங்கும் ஒன்பிளஸ் போன்களும், கிளியர் ஆடியோ ரெக்கார்டிங்கிற்கு ஒன்பிளஸ் 10 சீரிஸ் மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களும் தேவை).

கூடுதல் வசதிகள் - கூகுள் ஜெமினி (Google Gemini) குரல்வழி அணுகல், கழுத்து ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் 'நெக் ஹெல்த்' (Neck Health) விழிப்புணர்வு அலர்ட் மற்றும் 39ms வரையிலான குறைந்த தாமத கேமிங் மோட் (Low-Latency Gaming Mode) போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

45
இணைப்பு & பேட்டரி திறன் (Connectivity & Battery)
Image Credit : X

இணைப்பு & பேட்டரி திறன் (Connectivity & Battery)

இணைப்புத் திறன் - புளூடூத் 6.1 (Bluetooth 6.1), கூகுள் ஃபாஸ்ட் பேர், மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர் ஆகியவற்றை ஆதரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் (Dual Connection) இணைக்கும் வசதியும் உண்டு. AAC, SBC, LHDC மற்றும் LC3 ஆகிய ஆடியோ கோடெக்குகளை இது ஆதரிக்கிறது.

பேட்டரி லைஃப் - ஏ.என்.சி (ANC) ஆஃப் செய்யப்பட்ட நிலையில், இயர்பட்ஸ் 13 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 53 மணி நேரமும் உழைக்கும். ஏ.என்.சி ஆன் செய்யப்பட்டால், இயர்பட்ஸ் 6 மணி நேரமும், கேஸுடன் 26 மணி நேரமும் உழைக்கும். ஏ.என்.சி மற்றும் LHDC இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் 5.5 மணி நேரமும், கேஸுடன் 22 மணி நேரமும் பேட்டரி லைஃப் கிடைக்கும்.

வேகமான சார்ஜிங் - 10 நிமிட வேகமான சார்ஜிங் மூலம் 14 மணி நேர பிளேபேக் பெற முடியும். சார்ஜிங் கேஸ் USB Type-C, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

55
டிசைன் & எடை (Design & Build)
Image Credit : X

டிசைன் & எடை (Design & Build)

நிறங்கள் - டைட்டானியம் ஷேடோ (Titanium Shadow) மற்றும் போலார் ஒயிட் (Polar White) ஆகிய 2 நிறங்களில் கிடைக்கிறது.

பாதுகாப்பு - இயர்பட்ஸ்களுக்கு தூசி மற்றும் நீர் புகா பாதுகாப்பிற்கான IP55 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது (சார்ஜிங் கேஸுக்கு பாதுகாப்பு ரேட்டிங் இல்லை).

எடை - ஒவ்வொரு இயர்பட்டும் 5.6 கிராம் எடையும், சார்ஜிங் கேஸ் 41.8 கிராம் எடையும் கொண்டது. மொத்த எடை தோராயமாக 53 கிராம் ஆகும்.

அறிமுகம் மற்றும் விலை விவரம்:

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த 'பட்ஸ் புரோ 4' மாடலின் விவரங்களை உலகளாவிய இணையதளத்தில் பட்டியலிட்டுள்ள போதிலும், இதன் வெளியீட்டு தேதி, விலை அல்லது இந்திய சந்தையில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8,000mAh பேட்டரி, 50MP கேமரா: விவோ Y32 4G-யை விட 5G மாடலில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?
Recommended image2
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Recommended image3
Heat Bag Sealer : ரூ.240 இருந்தால் போதும்! சமையலறை வேலையை ஈஸியாக்கும் மாடர்ன் கேட்ஜெட்
Related Stories
Recommended image1
8,000mAh பேட்டரி, 50MP கேமரா: விவோ Y32 4G-யை விட 5G மாடலில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?
Recommended image2
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved