MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சாதனங்கள்
  • 7,000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: இந்தியாவில் மிரட்ட வரும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ; முழு விவரம் இதோ!

7,000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: இந்தியாவில் மிரட்ட வரும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ; முழு விவரம் இதோ!

இந்தியாவில் விரைவில் களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், 7000mAh பேட்டரி மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் இதோ.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Nov 17 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ வெளியீடு
Image Credit : X

மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ வெளியீடு

இந்தியச் சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் மாடலுக்கு முன்பாகவே, மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. பிரபல இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) புதிய 'நியோ' (Neo) ஸ்மார்ட்போன் குறித்த டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் போனின் பின்புற வடிவமைப்பு குறித்த முதல் பார்வையையும், இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளதையும் மோட்டோரோலா சூசகமாகத் தெரிவித்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் இந்தப் போனின் பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், வெளியாகியுள்ள டீசர் 'மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ' (Motorola Edge 70 Neo) மாடலுக்கானதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. இதுவரை இந்தப் போன் குறித்து வெளியாகியுள்ள முழு விவரங்களை பற்றி பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டிசைன் & எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
Image Credit : X

டிசைன் & எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

ஃபிளிப்கார்ட்டில் வெளியாகியுள்ள சமீபத்திய டீசரில், உங்கள் சோஷியல் ரெடி யுகம் அழைக்கிறது (your social ready era is calling) என்ற வாசகத்துடன் அடர் பச்சை (Dark green) நிற ஸ்மார்ட்போன் காட்டப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் சதுர வடிவிலான கேமரா மாட்யூல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 3 வட்ட வடிவ கட்-அவுட்கள் மற்றும் தனியாக ஒரு எல்இடி ஃபிளாஷ் (LED flash) இடம்பெற்றுள்ளது. பின்புற பேனலின் மையப்பகுதியில் மோட்டோரோலா லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான கசிந்த புகைப்படங்களில் (Leaked renders), இந்தப் போன் வெளிர் நீலம் மற்றும் வெளிர் இளஞ்சிவப்பு (Pale pink) நிறங்களிலும் காணப்பட்டது. மேலும், 'மவுண்டன் வியூ' (Mountain View), 'மில்கி ப்ளூ' (Milky Blue), 'சேஜ்' (Sage) மற்றும் 'கிரே லிலாக்' (Gray Lilac) ஆகிய 4 பான்டோன் (Pantone) நிறங்களில் இது வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதன் பின்புறம் டெக்ஸ்சர்டு ஃபினிஷ் (Textured finish) டிசைனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
ஸ்கிரீன் & செயல்திறன்
Image Credit : X

ஸ்கிரீன் & செயல்திறன்

டிஸ்ப்ளே - 6.78 இன்ச் 1.5K OLED திரை மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரலாம். நான்கு பக்கங்களும் வளைந்த விளிம்புகள் (Quad-curved edges), அதிகபட்சமாக 5,200 நிட்ஸ் பிரகாசம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு ஆகியவை இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.

பிராசஸர் & பேட்டரி - குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 (Qualcomm Snapdragon 7s Gen 3) சிப்செட், LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இது செயல்படலாம். ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்துடன் வெளிவரவுள்ள இந்தப் போனில், பிரம்மாண்டமான 7,000mAh பேட்டரி மற்றும் 45W வயர்டு சார்ஜிங் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் IP64 தரச்சான்றும் பெற்றிருக்கலாம்.

கேமரா - பின்புறத்தில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 50MP சோனி LYTIA 710 பிரைமரி கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் இடம்பெறலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்புறம் 32MP கேமரா வழங்கப்பட வாய்ப்புள்ளது.

44
எப்போது அறிமுகமாகும்? விலை என்ன?
Image Credit : X

எப்போது அறிமுகமாகும்? விலை என்ன?

ஃபிளிப்கார்ட் மைக்ரோசைட் இணையதள முகவரியின் (URL) அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் நவ.26, 2026 அன்று அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டோரோலா நிறுவனம் இந்தத் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இதன் அறிமுகம் இருக்கும் என்பதைச் சமீபத்திய டீசர் உறுதிப்படுத்துகிறது.

விலையைப் பொறுத்தவரை, இந்தப் போன் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம் எனச் சில அறிக்கைகள் கூறுகின்றன. அதே சமயம், மற்றொரு அறிக்கையின்படி இதன் விலை ரூ.25,000 முதல் ரூ.28,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் அறிமுகமானால், ரூ.30,999 ஆரம்ப விலையில் விற்பனையாகும் 'மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன்' (Motorola Edge 70 Fusion) மாடலை விட இது மலிவானதாக இருக்கும். ஏற்கனவே ஃபியூஷன் மாடலில் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் வேகமான 68W சார்ஜிங் வசதி இருப்பதால், எட்ஜ் 70 நியோவின் இறுதி விலை சந்தையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(8.1 ov)31/0
SLSL
98
Day 1 - Session 2
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8,000mAh மெகா பேட்டரி, 200MP கேமரா: ஓப்போ ரெனோ 17 ப்ரோ; விலை & சிறப்பம்சங்கள் இதோ!
Recommended image2
200MP கேமரா, 9000mAh பேட்டரி: ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவிடப் போகும் ஹானர் 700 சீரிஸ்:
Recommended image3
டைட்டன் முதல் ரியல்மி வரை: ஜி.பி.எஸ், ப்ளூடூத் காலிங் வசதியுடன் பட்ஜெட்டில் கிடைக்கும் 5 அசத்தல் ஸ்மார்ட்வாட்சுகள்!
Related Stories
Recommended image1
8,888mAh மெகா பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்; பட்ஜெட் விலையில் சம்பவம் செய்யத் தயாராகும் சியோமி - கசிந்த முழு விவரம்!
Recommended image2
Oppo Watch 5 Launch: 10 நாட்கள் பேட்டரி பேக்கப், 100+ ஸ்போர்ட்ஸ் மோடுகள்; ஒப்போவின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved