- Home
- டெக்னாலஜி
- Oppo Watch 5 Launch: 10 நாட்கள் பேட்டரி பேக்கப், 100+ ஸ்போர்ட்ஸ் மோடுகள்; ஒப்போவின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
Oppo Watch 5 Launch: 10 நாட்கள் பேட்டரி பேக்கப், 100+ ஸ்போர்ட்ஸ் மோடுகள்; ஒப்போவின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
சீனாவில் நடந்த நிகழ்வில் ஒப்போ ரெனோ 17 சீரிஸ் சாதனங்களுடன் புதிய ஒப்போ வாட்ச் 5 (Oppo Watch 5) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 351mAh பேட்டரி மூலம் 10 நாட்கள் வரை பேக்கப் தரும் இதில், 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன.

10 நாட்கள் பேட்டரி பேக்கப் உடன் 'ஒப்போ வாட்ச் 5' அறிமுகம்
சீனாவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில் ஒப்போ ரெனோ 17 சீரிஸ் (Oppo Reno 17 Series), ஒப்போ பேட் ஏர் 6 (Oppo Pad Air 6) மற்றும் ஒப்போ என்கோ கிளிப் 2 (Oppo Enco Clip 2) சாதனங்களுடன் இணைந்து புதிய ஒப்போ வாட்ச் 5 (Oppo Watch 5) ஸ்மார்ட்வாட்சும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
1.85 இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்வாட்சில், இதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கண்காணித்தல், தூக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய மற்றும் ஃபிட்னஸ் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள், உள்ளமைக்கப்பட்ட செயற்கைக்கோள் பொசிஷனிங் (Built-in Satellite Positioning) மற்றும் நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கும் வகையில் 5ATM, IP69 மற்றும் IP69K ஆகிய ரேட்டிங்குகளையும் இது பெற்றுள்ளது.
ஒப்போ வாட்ச் 5 விலை & விற்பனை விவரம்
ஸ்டாரி பிளாக் (Starry Black), ஃபேரி டேல் கிரீன் (Fairy Tale Green), மூன்லைட் ஒயிட் (Moonlight White) மற்றும் விஷ் ஆரஞ்ச் (Wish Orange) ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ள ஒப்போ வாட்ச் 5 மாடலின் விலை 899 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 12,700) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் என்சாண்டட் பர்பிள் (Enchanted Purple) நிற வேரியண்ட் சற்று அதிக விலையாக 999 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 14,000) விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஒப்போ வாட்ச் 5 சிறப்பம்சங்கள் (Specifications)
ஒப்போ வாட்ச் 5 ஸ்மார்ட்வாட்சில் 390×450 பிக்சல் ரெசல்யூஷன், 322ppi பிக்சல் அடர்த்தி மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடில் அதிகபட்சமாக 3,000 நிட்ஸ் (3,000 nits) பிரைட்னஸ் கொண்ட 1.85 இன்ச் AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பிற்காக GG5 கிளாஸ் புரொடெக் (GG5 Glass Protection) கொடுக்கப்பட்டுள்ளது. ColorOS Watch 17 இயங்குதளத்தில் செயல்படும் இந்த வாட்ச், ஆண்ட்ராய்டு 10 (Android 10) மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளையும், iOS 16 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளையும் சப்போர்ட் செய்கிறது. புளூடூத் 5.2 (Bluetooth 5.2), NFC பேமெண்ட் வசதி, அக்சஸ் கார்டு சப்போர்ட் மற்றும் ஒப்போவின் சியாபு அசிஸ்டென்ட் (Xiaobu Assistant) ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.
தொடர்ச்சியான இதயத் துடிப்பு & ரத்த ஆக்சிஜன் (SpO2) கண்காணிப்பு, சீரற்ற இதயத் துடிப்புக்கான எச்சரிக்கை, மணிக்கட்டு வெப்பநிலை (Wrist Temperature) கண்காணிப்பு மற்றும் மாதவிடாய் சுழற்சி மேலாண்மை போன்ற ஆரோக்கிய அம்சங்கள் இதில் உள்ளன. மேலும், நாள் முழுவதும் தூங்கும் முறைகளைக் கண்காணித்து, தூக்கத்தின் தரம் குறித்த அறிக்கையையும், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் (Apnoea Risk Assessments) குறித்த மதிப்பீட்டையும் இது வழங்குகிறது.
ஓட்டம் (Running), நீச்சல் (Swimming), சைக்கிள் ஓட்டுதல் (Cycling) மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை இது சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக, உடல் கொழுப்பைக் குறைக்க உதவும் பிரத்யேக ‘சூப்பர் ஃபேட் பர்னிங் மோட்’ (Super Fat Burning Mode) இதில் இடம்பெற்றுள்ளது. ஓடுவது, நடப்பது மற்றும் சைக்கிள் ஓட்டுவதை இது தானாகவே கண்டறியும் திறன் கொண்டது; அத்துடன் உடற்பயிற்சி திறன், ஃபிட்னஸ் நிலை மற்றும் உடல் மீள்வதற்கான நேரம் (Recovery Time) குறித்த முழுமையான பகுப்பாய்வையும் வழங்குகிறது.
பேட்டரி மற்றும் வடிவமைப்பு
ஒப்போ வாட்ச் 5-ல் 351mAh பேட்டரி மற்றும் மேக்னடிக் சார்ஜிங் (Magnetic Charging) வசதி உள்ளது. இதன் பேட்டரி திறன் நீண்ட பேட்டரி மோடில் (Long Battery Life Mode) 10 நாட்கள் வரையிலும், சாதாரண மோடில் (Standard Mode) 7 நாட்கள் வரையிலும், ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (AOD) ஆன் செய்யப்பட்ட நிலையில் 3 நாட்கள் வரையிலும் நீடிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், BeiDou, GPS, Galileo, GLONASS மற்றும் QZSS ஆகிய செயற்கைக்கோள் அமைப்புகளை சப்போர்ட் செய்யும் சிங்கிள்-ஃபிரீக்வென்சி L1 சாட்டிலைட் பொசிஷனிங் வசதியும் இதில் உள்ளது.
அலுமினியம் அலாய் கேஸ் மற்றும் சதுர வடிவ டயலுடன் (Square Dial) வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச், 42×37.27×9.2 மி.மீ அளவுகளைக் கொண்டுள்ளது. ஸ்ட்ராப் இல்லாமல் சுமார் 25 கிராம் எடையையும், ஸ்ட்ராப்புடன் நிறத்திற்கு ஏற்ப 42 கிராம் முதல் 46 கிராம் வரையிலான எடையையும் இது கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.









