- Home
- டெக்னாலஜி
- 25.9 பில்லியன் கி.மீ தூரம் கடந்த வோயேஜர் 1: வேற்றுக்கிரகவாசிகளுக்காக நாசா அனுப்பிய தங்கத் தட்டு!
25.9 பில்லியன் கி.மீ தூரம் கடந்த வோயேஜர் 1: வேற்றுக்கிரகவாசிகளுக்காக நாசா அனுப்பிய தங்கத் தட்டு!
நாசாவின் வோயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து 25.9 பில்லியன் கி.மீ தொலைவைக் கடந்து, மனிதரால் உருவாக்கப்பட்ட பொருட்களில் மிகத் தொலைவில் சென்றடைந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

வேற்றுக்கிரகவாசிகளுக்கு நாசா அனுப்பிய செய்தி
அமெரிக்க விண்கல ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் வோயேஜர் 1 விண்கலம், பூமியிலிருந்து 25.9 பில்லியன் கி.மீ தொலைவை (ஒரு ஒளி-நாள் தூரம்) எட்டியதன் மூலம் மனிதரால் உருவாக்கப்பட்ட பொருட்களில் மிகத் தொலைவில் சென்றடைந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. பூமியிலிருந்து இவ்வளவு தூரத்தைக் கடக்க இந்த விண்கலத்திற்கு 49 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 11 நாட்கள் ஆகியுள்ளன. தற்போது சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் தருவாயில் உள்ள இந்த விண்கலம் மணி நேரத்திற்கு 61,000 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. ஆச்சரியப்படும் விதமாக, இது தற்போதும் நாசாவுடன் தொடர்பில் உள்ளது.
கோல்டன் ரெக்கார்டில் உள்ள தகவல்கள்
எதிர்காலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் யாராவது இதைக் கண்டறிந்தால், மனிதகுலத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த விண்கலத்தில் தங்கம் பூசப்பட்ட 'கோல்டன் ரெக்கார்டு' (Golden Record) என்ற 12 இன்ச் செப்புத் தட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதில் பூமியின் வாழ்த்துகள், இசை, புகைப்படங்கள் மற்றும் ஒலிகள் அடங்கியுள்ளன.
காட்சிகள் மற்றும் படங்கள் - மனித உடற்கூறியல், டிஎன்ஏ, குழந்தை பிறப்பு, குடும்பங்கள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள், தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் போன்ற கட்டமைப்புகள் மற்றும் அன்றாட செயல்பாடுகளைக் காட்டும் 115 படங்கள் இதில் உள்ளன.
இயற்கை ஒலிகள் - அலைகளின் சத்தம், காற்று, இடி, பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள் இடம்பெற்றுள்ளன.
இசைக் கலவைகள் - பாஹ், பீத்தோவன், மோசார்ட் ஆகியோரின் இசையுடன், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பாரம்பரிய இசையும், அமெரிக்க இசைக்கலைஞர் சக் பெர்ரியின் பாடலும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பங்களிப்பு
இந்தத் தட்டில் புகழ்பெற்ற இந்தியப் பாடகர் கேசரபாய் கேட்கர் பாடிய 'ஜாத் கஹான் ஹோ' என்ற பாரம்பரிய ராகம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, தெலுங்கு மற்றும் உுருது ஆகிய 10 இந்திய மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேற்றுக்கிரகவாசிகள் இதனை எவ்வாறு இயக்குவது?
இந்தத் தட்டை எவ்வாறு இயக்குவது என்பதை விளக்கும் வரைபடங்கள் மற்றும் நமது சூரிய குடும்பத்தின் இருப்பிடத்தைக் காட்டும் பல்சர் (Pulsar) அடிப்படையிலான அண்ட வரைபடம் ஆகியவை பாதுகாப்பு அட்டையில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் வேறு நட்சத்திர அமைப்பை நெருங்க சுமார் 40,000 ஆண்டுகள் ஆகலாம் என்பதால், அதுவரை இந்தச் சாதனம் மனிதகுலத்தின் வரலாற்றுச் சின்னமாகப் பயணத்தைத் தொடர்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.











