MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Jio Users Alert: ஜியோ சிம் யூசர்ஸுக்கு பிக் ஷாக்! ரீசார்ஜ் முடிந்தால் இனி இந்த வசதியும் கட்..?

Jio Users Alert: ஜியோ சிம் யூசர்ஸுக்கு பிக் ஷாக்! ரீசார்ஜ் முடிந்தால் இனி இந்த வசதியும் கட்..?

ரீசார்ஜ் காலாவதியான பிறகும் ஜியோ சிம் கார்டில் இலவசமாக இன்கமிங் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு இனி ஷாக் காத்திருக்கிறதா? ரீசார்ஜ் செய்யாத சிம் கார்டுகளுக்கான இந்த வசதியை ஜியோ நிறுத்தத் தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Asianet News
Published : Nov 17 2026, 07:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரிலையைன்ஸ் ஜியோ..!
Image Credit : Asianet News

ரிலையைன்ஸ் ஜியோ..!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரீசார்ஜ் செய்யாத சிம் கார்டுகளுக்கான இலவச இன்கமிங் சேவையை நிறுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரீசார்ஜ் காலாவதியான பிறகும் சிம் கார்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுவரை ஜியோவில் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தாலும், பல சந்தர்ப்பங்களில் இன்கமிங்களைப் பெற முடிந்தது. இதனால், அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது இரண்டாவது சிம் கார்டாகவோ ஜியோ எண்ணைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரீசார்ஜ் முடிந்தால் எப்போது வேண்டுமானாலும் அழைப்புகள் நிறுத்தப்படலாம்!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் அபிஷேக் யாதவ் என்ற தொழில்நுட்பத் தகவல் பகிர்வாளர், ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்குக் கிடைத்த குறுஞ்செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

அதில், வாடிக்கையாளரின் கடைசி ரீசார்ஜ் திட்டம் காலாவதியாகிவிட்டதாகவும், இனி எந்த நேரத்திலும் இன்கமிங் நிறுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி ஜியோவின் தானியங்கி தகவல் அனுப்பும் அமைப்பு மூலம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மாற்றம் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு வட்டத்தில் (Telecom Circle) மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதா அல்லது நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளதா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.

மேலும், இந்த விவகாரம் குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, இதனை உறுதிப்படுத்தப்பட்ட நாடு தழுவிய புதிய விதிமுறையாகக் கருத முடியாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பா?
Image Credit : Asianet News

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பா?

ஜியோவின் இந்த நடவடிக்கை உண்மையாகவே நாடு முழுவதும் அமலுக்கு வந்தால், குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, ஒரே ஒரு சிம் கார்டை மட்டுமே அடிக்கடி பயன்படுத்துபவர்கள் அல்லது இரண்டாவது சிம் கார்டாக ஜியோவை வைத்திருப்பவர்கள் இனி ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

இதுவரை ஜியோவின் இலவச இன்கமிங் வசதி பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், ரீசார்ஜ் செய்யாமல் சிம் கார்டுகளைச் செயல்பாட்டில் வைத்திருப்பதால் நிறுவனத்துக்கு நேரடியாக வருவாய் கிடைப்பதில்லை. எனவே, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனமும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றுகிறதா?

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், நீண்ட காலமாகவே ரீசார்ஜ் காலாவதியான சிம் கார்டுகளுக்கான இன்கமிங் சேவையில் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகிறது.

தற்போது ஜியோவும் இதே பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தால், தொலைத்தொடர்புத் துறையில் இது முக்கியமான மாற்றமாக அமையலாம். அதேசமயம், இதனால் நிறுவனத்தின் சராசரி வருவாய் ஒரு வாடிக்கையாளருக்கு (ARPU) எவ்வளவு அதிகரிக்கும் என்பது தற்போதைக்கு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

33
ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் கவனிக்க வேண்டியவை!
Image Credit : Jio

ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் கவனிக்க வேண்டியவை!

இதற்கிடையில், ஜியோ சமீபத்தில் ரூ.147, ரூ.177, ரூ.196 மற்றும் ரூ.197 விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டங்களின் சேவை வேலிடிட்டி முறையே 22 நாட்கள், 28 நாட்கள், 30 நாட்கள் மற்றும் ஒரு காலண்டர் மாதம் ஆகும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) அறிவுறுத்தலுக்குப் பிறகு இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய சிம் கார்டின் வேலிடிட்டி மற்றும் இன்கமிங் வசதி தொடர்பான நிலையைச் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

முக்கியமாக: ஜியோ நிறுவனம் இந்த இலவச இன்கமிங் சேவை நிறுத்தம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி பரவி வருகிறது. எனவே, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த மாற்றம் அமலுக்கு வந்துவிட்டதாக உறுதியாகக் கூற முடியாது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ
தொழில்நுட்பம்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(37.2 ov)121/3
SLSL
98
Day 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
சாம்சங் முதல் நத்திங் போன் வரை: டீனேஜ்களுக்கான 5 பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!
Recommended image2
7,000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: இந்தியாவில் மிரட்ட வரும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ; முழு விவரம் இதோ!
Recommended image3
இதயத்தின் எந்த பகுதி முதலில் முதுமையடைகிறது தெரியுமா? மருத்துவ உலகையே ஆச்சரியப்படுத்திய புதிய ஆய்வு!
Related Stories
Recommended image1
Cheapest Prepaid Plans: ஜியோ, ஏர்டெல், Vi வழங்கும் மலிவான ரீசார்ஜ் பிளான்கள்
Recommended image2
Jio Rs 15 Recharge Plan: வெறும் ரூ.15ல் Airtel, Viன் கதையை முடித்த அம்பானி..! கொத்தாக Jioக்கு மாறும் கஸ்டமர்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved