- Home
- டெக்னாலஜி
- புது போன் இனி வாங்க முடியாது போலயே.. போன்களின் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
புது போன் இனி வாங்க முடியாது போலயே.. போன்களின் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
உலகளாவிய சிப் பற்றாக்குறை மற்றும் நாணய மாற்று விகித ஏற்ற இறக்கத்தால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலைகள் உயர்ந்துள்ளன. ஏற்கனவே சந்தையில் மொபைல்களின் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் விலை உயர்வு
டெல்லியில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, நாட்டில் நாணய மாற்று விகிதத்தில் ஏற்ற இறக்கமும், சிப் மற்றும் மெமரி உதிரிபாகங்களும் கடும் பற்றாக்குறையும் இணைந்து ஸ்மார்ட்போன் சந்தையில் விலை உயர்வை உருவாக்கியுள்ளது. புத்தாண்டைத் தொடர்ந்து, சீன ஸ்மார்ட்போன் பிராண்டான Vivo மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நத்திங் ஆகிய நிறுவனங்களின் சில மாடல்களில் விலையை 4 முதல் 13 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக டெலிகாம் டாட் காம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போக்கைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே சந்தையில் மொபைல்களின் விலை அதிகரித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள் என்பது முக்கியமான விஷயமாகும்.
ஸ்மார்ட்போன் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம், உலகளவில் சிப் உற்பத்தியாளர்கள் உயர்தர DDR4, DDR5 மெமரி மாட்யூல்கள் மற்றும் NAND மெமரிகளை செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான டேட்டா சென்டர்களுக்காக அதிகம் ஒதுக்கி வருவதாகும். இதன் விளைவாக, மொபைல் போன்களுக்கு தேவையான ரேம் மற்றும் மெமரி ஸ்டோரேஜ் சிப்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக, மெமரி சிப்களின் விலை 160 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிப் நெருக்கடி 2026 ஜூலை–செப்டம்பர் காலாண்டு வரை நீடிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.
மொபைல் விலை அதிகரிப்பு
இந்த சூழலில், விவோ நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் Y31 மற்றும் Y31 புரோ மாடல்களின் அதிகபட்ச விற்பனை விலையில் மாற்றம் உள்ளது. 4GB + 128GB vivo Y31 மாடலின் விலை ரூ.16,999 ஆகவும், 6GB + 128GB மாடல் ரூ.18,499 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், Y31 ப்ரோ மாடல்களிலும் ரூ.1,000 வரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், 2026 ஜனவரி 1 முதல் நத்திங் நிறுவனம் தனது Phone (3a) Lite மாடல்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்று சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 8 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ள Oppo ரெனோ 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், முந்தைய ரெனோ 14 சீரிஸை விட சுமார் ரூ.2,000 அதிக விலையில் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிட, AIMRA, ரூ.50,000க்கு குறைவான ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே 10 சதவீத விலை உயர்வு அமலில் உள்ளது. மேலும், இந்த மாதத்திலேயே இன்னொரு கட்ட விலை உயர்வும், அதனைத் தொடர்ந்து 2026 ஏப்ரல் மாதம் 30 சதவீதம் வரை விலை உயரவும் வாய்ப்புள்ளது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் விரைவில் முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

