MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Google Pixel Tag: பொருட்களை இனி தொலைக்கவே மாட்டீங்க.. ரூ.3,799 தான் விலை.. வசதிகள் பட்டையை கிளப்புது

Google Pixel Tag: பொருட்களை இனி தொலைக்கவே மாட்டீங்க.. ரூ.3,799 தான் விலை.. வசதிகள் பட்டையை கிளப்புது

Google Pixel Tag: கூகுள் தனது முதல் புளூடூத் கண்காணிப்பு சாதனமான பிக்சல் டேக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் வெளியாகி உள்ள இதன் விலை, அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 13 2026, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிக்சல் டேக் விவரங்கள்
Image Credit : Google

பிக்சல் டேக் விவரங்கள்

சாவி, கைப்பை, பணப்பை அல்லது பயணப் பெட்டி போன்ற முக்கியமான பொருட்களை அடிக்கடி எங்கே வைத்திருப்போம் என்று தேடுபவர்களுக்கு உதவும் வகையில், கூகுள் தனது முதல் புளூடூத் கண்காணிப்பு சாதனமான பிக்சல் டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிளின் ஏர்டேக்கிற்கு போட்டியாக களமிறங்கும் இந்த சிறிய சாதனம், கூகுளின் ஃபைண்ட் ஹப் வலையமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

இதன் மூலம் தொலைந்து போன பொருளின் இருப்பிடத்தை வரைபடத்தில் பார்க்க முடிவதுடன், அருகில் இருந்தால் சாதனத்தில் உள்ள ஸ்பீக்கரை இயக்கி பொருளைக் கண்டுபிடிக்க முடியும். புளூடூத் சேனல் சவுண்டிங் மற்றும் அல்ட்ரா வைட்பேண்ட் போன்ற தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளதால், பொருள் இருக்கும் திசை மற்றும் அதற்கான தூரத்தை மேலும் துல்லியமாக அறிய உதவலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கூகுள் பிக்சல் டேக்
Image Credit : Google

கூகுள் பிக்சல் டேக்

பிக்சல் டேக்கில் இடம்பெற்றுள்ள தொலைபேசி தேடல் பொத்தானும் பயனுள்ள வசதிகளில் ஒன்றாக உள்ளது. டேக்கில் இருக்கும் பொத்தானை அழுத்தினால், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசியில் ஒலி எழுப்பி அதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். கைப்பேசி அமைதி நிலையில் இருந்தாலும் ஒலி எழுப்பும் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஃபைண்ட் ஹப் மூலம் பிக்சல் டேக்கின் ஒலிப்பானை தொலைவில் உள்ள இயக்கி அருகில் இருக்கும் பொருளைத் தேடலாம். கூகுள் பிக்சல் சாதனங்களுடன் விரைவான இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூகுளின் செயற்கை நுண்ணறிவு உதவியாளரான ஜெமினியிடம் ஒலிக்கச் சொல்லும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

Google Pixel 11: அடுத்த சரவெடி.. Tensor G6 சிப், புதிய AI வசதிகள்.. விலை எவ்வளவு தெரியுமா?

35
பிக்சல் டேக் பேட்டரி
Image Credit : Google

பிக்சல் டேக் பேட்டரி

பேட்டரியை பொறுத்தவரை, பிக்சல் டேக்கில் பயனர்களே மாற்றக்கூடிய சிஆர்2032 வகை பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை புதிய பேட்டரியை பொருத்திய பிறகு ஓராண்டுக்கும் மேலாக சாதனம் இயங்கும் வகையில் உள்ளது. தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்புக்காக ஐபி67 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றாடப் பயன்பாட்டில் தூசி மற்றும் குறிப்பிட்ட அளவிலான தண்ணீர் பாதிப்பிலிருந்து சாதனத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது. சுமார் 12 கிராம் எடை கொண்டதாகக் கூறப்படும் பிக்சல் டேக், தற்போது ‘ஃபாக்’ என்ற நிறத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் இருப்பதால் சாவி வளையம், பை அல்லது பயணப் பெட்டி போன்றவற்றுடன் எளிதாக இணைக்க முடியும்.

45
பிக்சல் டேக் முக்கிய வசதிகள்
Image Credit : Google

பிக்சல் டேக் முக்கிய வசதிகள்

பிக்சல் டேக்கின் முக்கிய பலமாக கூகுளின் ஃபைண்ட் ஹப் வலையமைப்பு உள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் அதனுடன் இணக்கமான கண்காணிப்பு கருவிகளின் உதவியுடன் தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிக்க இந்த அமைப்பு உதவுகிறது. குறிப்பாக அல்ட்ரா வைட்பேண்ட் வசதி கொண்ட கைப்பேசி மற்றும் கண்காணிப்பு சாதனம் இணைக்கப்பட்டுள்ளது.

பொருள் எந்த திசையில் உள்ளது மற்றும் எவ்வளவு தூரத்தில் உள்ளது போன்ற தகவல்களை துல்லியமாகக் கண்டறிய முடியும். வீட்டுக்குள் எங்கே வைத்தோம் என்று மறந்துபோன சாவி அல்லது பையை தேடுவதிலிருந்து, பயணத்தின் போது தொலைந்த பொருட்களை கண்டுபிடிப்பது வரை இந்த வசதி பயன்படுத்தப்படலாம்.

55
பிக்சல் டேக் விலை
Image Credit : Google

பிக்சல் டேக் விலை

இந்திய சந்தையில் ஒரு பிக்சல் டேக்கின் விலை ரூ.3,799 என்றும், நான்கு சாதனங்கள் கொண்ட தொகுப்பின் விலை ரூ.12,900 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை கூகுள் இந்தியாவின் இணைய விற்பனையகம் மூலம் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்குப் பிறகு வெளியான பதிப்புகளில் இயங்கும் சாதனங்களுடன் இது இணக்கமாக இருக்கும்.

இதன் மூலம் ஆண்ட்ராய்டு சூழலில் கூகுள் தனது சொந்த கண்காணிப்பு சாதனத்தை களமிறக்கியுள்ளது. ஏற்கனவே ஆப்பிள் ஏர்டேக் வலுவான இடத்தை பிடித்த நிலையில், கூகுளின் ஃபைண்ட் ஹப் வலையமைப்பு, துல்லியமான இருப்பிடக் கண்டறிதல் வசதிகள் மற்றும் விலை ஆகியவை பிக்சல் டேக்கின் வரவேற்பை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூகிள்
நுட்பக் கருவி
நகர்பேசி
 
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தினமும் 2.5GB டேட்டா! 3 வருஷத்துக்கு ரீசார்ஜே வேண்டாம்.. ஒரு நாளைக்கு ரூ.9 மட்டுமே! Jioவின் அதிரடி!
Recommended image2
வெறும் ரூ.35 போதும்.. 1GB டேட்டாவுடன் 2 ரீஜினல் ஓடிடி சந்தாக்கள் இலவசம்: வி.ஐ அதிரடி ஆஃபர்!
Recommended image3
BSNL Offer: ரூ.1 ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை
Related Stories
Recommended image1
Google Pixel 11: அடுத்த சரவெடி.. Tensor G6 சிப், புதிய AI வசதிகள்.. விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image2
இந்தியா காட்டிய பாதை.. ஆசியா, ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் வரலாறு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved