இந்திய மக்களின் ஜனநாயகனாக மாறும் புதிய டாடா கார்.. கெத்து காட்டும் டாடா பஞ்ச்
டாடா மோட்டார்ஸ் தனது பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் புதிய அலாய் வீல்கள், மற்றும் முழு அகல LED டெயில் லைட் போன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வருகிறது.

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல மாடலான டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புக்கான முதல் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி நடைபெற உள்ள அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக வெளியான இந்த டீசர், கார் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சோதனை படங்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது டிசைன் குறித்த முதல் தெளிவான பார்வை கிடைத்துள்ளது. புதிய டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முந்தைய வடிவமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
டாடா பஞ்ச் புதிய டிசைன்
குறிப்பாக முன்புறத்தில் உள்ள டிஆர்எல் ஹெட்லைட்கள், பியானோ பிளாக் எலிமென்ட்களுடன் புதிய பாலிகனல் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய முன்புற பம்பர் வடிவமைப்பு காருக்கு ஒரு புதிய, மாடர்ன் லுக் கொடுக்கிறது. இந்த புதிய டிசைன் ஆனதுடாடா ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் காணப்படும் ஸ்டைலுடன் ஒத்ததாக உள்ளது. பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அதன் பழைய சில்ஹவெட்டையே தக்க வைத்திருந்தாலும், புதிய அலாய் வீல்ஸ் மூலம் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றுள்ளது. பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டாடா பஞ்ச் அம்சங்கள்
முழு அகலத்திலும் நீளும் புதிய எல்இடி டெயில் லைட் ஸ்ட்ரிப், காரின் லுக்கை மேலும் பிரீமியம் ஆக மாறுகிறது. கூடுதலாக, புதிய நீல நிற ஷேடும் கவனம் ஈர்க்கிறது. கேபின் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், புதிய பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் அல்ட்ரோஸ் மாடலில் பயன்படுத்தப்படும் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், புதிய டாஷ்போர்டு லேஅவுட், ஒளிரும் லோகோ கொண்ட டூ-ஸ்போக் ஸ்டீரிங் வீல் போன்ற அப்டேட்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டால், இந்த மாடலின் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறலாம்.
டாடா பஞ்ச் எஞ்சின்
எஞ்சின் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. தற்போதைய மாடலில் உள்ள 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 88 hp பவர் மற்றும் 115 Nm டார்க் வழங்கும். CNG வேரியனும் இருக்கும்; அதில் 73.5 hp பவர் மற்றும் 103 Nm டார்க் கிடைக்கும். 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

