ஆக்டிவா vs ஜூபிடர்… குடும்பதிற்கான சிறந்த ஸ்கூட்டர் எது தெரியுமா.?
இந்தியாவின் பிரபலமான 125சிசி ஸ்கூட்டர்களான ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆகியவற்றின் விலை, மைலேஜ், செயல்திறன் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் விரிவாக ஒப்பீட்டு பார்க்கலாம்.

ஆக்டிவா 125 vs ஜூபிடர் 125
இந்திய சந்தையில் 125சிசி ஸ்கூட்டர் பிரிவில் அதிகம் பேசப்படும் இரண்டு மாடல்கள் ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆகும். தினசரி பயணம், குடும்ப பயன்பாடு, மைலேஜ் மற்றும் வசதிகள் என பல காரணிகளை வைத்து இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வார்கள். விலை, செயல்திறன், அம்சங்கள் போன்றவற்றில் இரண்டுக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. வாங்கும் முன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
ஜூபிடர் 125 விலை
விலை விஷயத்தில், பெரும்பாலான நகரங்களில் ஆக்டிவா 125-ன் விலை ஜூபிடர் 125-ஐ விட அதிகமாக உள்ளது. ஆக்டிவா 125-ன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.89,000 முதல் ரூ.93,000 வரை (வேரியண்ட் பொறுத்து) இருக்கிறது. அதே நேரத்தில், ஜூபிடர் 125-ன் விலை ரூ.75,000 முதல் ரூ.87,000 வரை காணப்படுகிறது. பட்ஜெட்டை முக்கியமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஜூபிடர் 125 சற்று வசதியான தேர்வாக இருக்கலாம்.
ஆக்டிவா 125 மைலேஜ்
மைலேஜ் மற்றும் இன்ஜின் செயல்திறன் பார்க்கும்போது, ஆக்டிவா 125 லிட்டருக்கு சுமார் 60 கி.மீ மைலேஜ் தருவதாக ஹோண்டா தெரிவிக்கிறது. ஜூபிடர் 125 சோதனைகளில் லிட்டருக்கு சுமார் 57 கி.மீ அளவிற்கு மைலேஜ் வழங்குகிறது. இன்ஜினில், ஆக்டிவா 125-ல் 123.92சிசி ஏர்-கூல்டு இன்ஜினில் இருந்து 8.31 ஹெச்பி பவர் மற்றும் 10.5 என்எம் டார்க் கிடைக்கிறது. ஜூபிடர் 125-ல் 124.8சிசி இன்ஜின் மூலம் 8.44 ஹெச்பி பவர் மற்றும் 10.5 என்எம் டார்க் கிடைக்கிறது. இரண்டிலும் CVT டிரான்ஸ்மிஷன் இருப்பதால் ஓட்டம் மென்மையாக இருக்கும். ஆனால் ஜூபிட்டரின் ரியல்ஃபீல் செயல்திறன் சற்று சுறுசுறுப்பாக இருக்கும் என பலர் கருதுகிறார்கள்.
தினசரி பயன்பாட்டு ஸ்கூட்டர்
அம்சங்கள் பகுதியில் இரண்டுக்கும் தனித்துவம் உள்ளது. ஆக்டிவா 125-ல் LED லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் (கனெக்டிவிட்டியுடன் சில வேரியண்ட்களில்) மற்றும் எரிபொருள் சேமிப்புக்கான ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. ஜூபிடர் 125-ல் SmartXonnect, USB சார்ஜிங் போன்ற வசதிகளுடன், இந்த பிரிவில் மிகப்பெரிய 33 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மொத்தத்தில், நம்பகத்தன்மை மற்றும் மைலேஜ் முக்கியமெனில் ஆக்டிவா 125, வசதிகள் மற்றும் விலையைக் கருத்தில் கொண்டால் ஜூபிடர் 125 சிறந்த தேர்வாக இருக்கலாம்.

