ஒரே டேங்கில் 770 கி.மீ.. ரூ.70,000 ரூபாய்க்குள் கிடைக்கும் தரமான மைலேஜ் பைக்
புதிய ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு குறிப்பிட்ட இந்த பைக் சிறந்த தேர்வாக உள்ளது. இந்த பைக் ரூ.65,407 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதிக மைலேஜ் பைக்
புதிய ஆண்டில் புதிய பைக் வாங்க நினைப்பவர்களுக்காக ஒரு அருமையான தகவல் ஆகும். குறைந்த விலை, அதிக மைலேஜ், தினசரி பயணத்திற்கு ஏற்ற வசதி என மூன்றையும் ஒரே நேரத்தில் தரும் பைக் தேடுகிறீர்களா? அப்படியானால், 70,000 ரூபாய்க்குள் கிடைக்கும் இந்த மைலேஜ் பைக் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கலாம். குறைந்த பட்ஜெட்டில் பெட்ரோல் செலவை குறைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
70,000 ரூபாய்க்குள் பைக்
இந்த பட்டியலில் முதன்மையாக கவனம் பெறுவது பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான பிளாட்டினா 100 பைக். விலை குறைவாக இருந்தாலும், மைலேஜ் விஷயத்தில் இந்த பைக் பெரிய அளவில் அசத்துகிறது. தினசரி ஆபிஸ், வேலை, கிராமப்புறம் முதல் நகரப் பயணம் வரை அனைத்திற்கும் ஏற்ற வகையில் இந்த மாடல் உள்ளது. இந்த பைக்கின் இந்திய சந்தை ஆரம்ப விலை ரூ.65,407 (எக்ஸ்-ஷோரூம்).
பெட்ரோல் சேமிப்பு பைக்
இந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி, நீளமான சீட், மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர் மற்றும் நல்ல கிரிப் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதே விலை பிரிவில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ், ஹோண்டா ஷைன் 100, ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் போன்ற பைக்குகளுக்கு இது நேரடி போட்டியாக உள்ளது. மைலேஜ் விஷயத்தில் இந்த பைக் உண்மையிலேயே கவனம் ஈர்க்கும். ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 70 கி.மீ வரை ஓடும் திறன் கொண்டது.
குறைந்த விலை பைக்
11 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டதால், ஒரே முறை முழு டேங்க் நிரப்பினால் சுமார் 770 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். இது பெட்ரோல் செலவை குறைக்கும். டிசைன் மற்றும் இன்ஜின் அம்சங்களைப் பார்த்தால், LED DRL-கள், புதிய ரியர் வியூ மிரர் போன்ற சிறிய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
பிளாட்டினா 100 பைக் அம்சங்கள்
99.59cc திறன் கொண்ட, 4-ஸ்ட்ரோக் DTS-i சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது 7,500rpm-ல் 8.2PS பவரை வழங்குகிறது. அதிகபட்ச வேகம் சுமார் 90 கி.மீ/மணி. முன்புறம் 130 மிமீ, பின்புறம் 110 மிமீ டிரம் பிரேக் மற்றும் ஆன்டி-ஸ்கிட் பிரேக்கிங் வசதியுடன் இந்த பைக் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

