இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவாவிற்கு மாற்றாக, அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட பைக்குகள் பிரபலமடைந்து வருகின்றன.
இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா நம்பகத்தன்மை, பராமரிப்பு செலவு மற்றும் ரிசல் விலைக்கு பெயர் பெற்றது. ஆனால், நீண்ட தூரம் தினமும் பயணிப்பவர்களும், அதிக மைலேஜ் விரும்பும் பயனர்களும் அதிகமாக பைக்குகளையே தேர்வு செய்கிறார்கள். காரணம் – ஸ்கூட்டர்களை விட பைக்குகள் எரிபொருள் செயல்திறன் மற்றும் இயங்குதிறனில் முன்னிலையில் இருக்கும். குறிப்பாக குறைந்த பட்ஜெட்டை வைத்திருப்பவர்களுக்கு பல சிறந்த ஆப்ஷன்கள் தற்போது சந்தையில் உள்ளன.
பஜாஜ் பிளாட்டினா 100
இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பெறும் பைக் பஜாஜ் பிளாட்டினா 100. விலை 65,407 மட்டுமே. இது ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 கிமீ வரை மைலேஜ் தரும் என பயனர்கள் கூறுகின்றனர். தினமும் ஆபீஸ்–ஹோம் பயணம் அல்லது கிராமப்புற நீண்ட தூர பயணங்களுக்கு இது மிகவும் தகுந்தது. பராமரிப்பு செலவு குறைவு என்பதால் பட்ஜெட் பிரிவில் இது திறமையான தேர்வு.
டிவிஎஸ் ரேடியன்
டிவிஎஸ் ரேடியன் விலை 55,100 – 77,900 வரை மாறுபடும். சிறந்த உருவாக்க தரம், நீண்ட ஆயுள் என பயனர்களிடையே நல்ல பெயர் பெற்றுள்ளது. மைலேஜ் சுமார் 74 கிமீ/லிட்டர். நகரங்களில் தினசரி போக்குவரத்துக்கு வேண்டிய நம்பகத்தன்மை இதில் உள்ளது.
ஹோண்டா ஷைன் 100
ஹோண்டாவின் பட்ஜெட் மாடலான Shine 100 விலை 63,441. குறைந்த பராமரிப்பு, நல்ல ரிசல் மதிப்பு மற்றும் சீரான மைலேஜ் இதன் முக்கிய பலன்கள். ஹோண்டா பைக்குகளுக்கான நம்பிக்கை காரணமாக, இந்த மாடல் நுழைவு நிலை பயனர்களிடையே விரைவாக பிரபலமானது.
ஹீரோ HF டீலக்ஸ்
ஹீரோ HF டீலக்ஸ் விலை 55,992 முதல். இதில் கிடைக்கும் மைலேஜ் சுமார் 65 கிமீ/லிட்டர். மிகவும் குறைந்த விலையில், நல்ல இன்ஜின் நீடித்த தன்மை மற்றும் செலவு குறைவான பராமரிப்பு ஆகியவை இதை சிறந்த கம்யூட்டர் பைக்காக மாற்றுகின்றன.
டிவிஎஸ் ஸ்போர்ட்
விலை 55,100 – 57,100. இந்த பைக் லிட்டருக்கு 70 கிமீ வரை மைலேஜ் தருவதாக டிவிஎஸ் கூறுகிறது. நீண்ட கால உபயோகத்துக்கு ஏற்ற இன்ஜின், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றால் மைலேஜ் காதலர்கள் இதையே அதிகமாக தேர்வு செய்கிறார்கள்.


