MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.5.65 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. குடும்பங்கள் கொண்டாடும் காருக்கான டெலிவரி ஆரம்பம்.. எது தெரியுமா?

ரூ.5.65 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. குடும்பங்கள் கொண்டாடும் காருக்கான டெலிவரி ஆரம்பம்.. எது தெரியுமா?

நிசான் மோட்டார் இந்தியா, தனது புதிய 7 சீட்டர் காரான நிசான் கிராவைட்டை ரூ.5.65 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறந்த மைலேஜ் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் குடும்பங்களைக் குறிவைத்து சந்தைக்கு வந்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 04 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நிசான் கிராவைட் 7 சீட்டர் கார்
Image Credit : Google

நிசான் கிராவைட் 7 சீட்டர் கார்

இந்தியாவில் புதிய 7 சீட்டர் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிசான் மோட்டார் இந்தியா, அதன் நிசான் கிராவைட் மாடலின் டெலிவரிகளை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்த கார் ஆரம்ப விலை ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் MPV தேடுபவர்களை குறிவைத்து இந்த மாடல் அறிமுகமாகியுள்ளது. இது சப்-4 மீட்டர் பிரிவில் வரும் கார் ஆகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
குறைந்த விலை 7 சீட்டர் கார்
Image Credit : Google

குறைந்த விலை 7 சீட்டர் கார்

வடிவமைப்பில் கிராவைட், நிசான் நிறுவனத்தின் அடையாளமாக இருக்கும் V-motion கிரில் வடிவத்தை கொண்டுள்ளது. முன்புறத்தில் மெல்லிய LED ஹெட்லைட்கள் மற்றும் டே டைம் ரன்னிங் லைட்கள் இடம்பெற்றுள்ளன. ஹூடில் “கிராவைட்” என்ற எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும்போது, ​​புதிய 15 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் இந்த காரின் தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

Related Articles

Related image1
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?
Related image2
6 ஏர்பேக் கொண்ட இந்தியாவின் மிகக் குறைந்த விலை கார்.. விலை ரூ.5 லட்சம் கூட இல்லைங்க
35
நிசான் கிராவைட் வசதிகள்
Image Credit : Google

நிசான் கிராவைட் வசதிகள்

பின்புற வடிவமைப்பிலும் கூர்மையான டெயில் லைட்கள், நடுவில் நிசான் லோகோ மற்றும் குரோம் ஸ்ட்ரிப் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார் Forest Green, Onyx Black, Blade Silver, Metallic Gray, Storm White ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. உள்ளமைப்பைப் பொருத்தவரை, கிராவைட் காரில் 7 பேர் வசதியாக அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

45
நிசான் கிராவைட் சிறப்பு அம்சங்கள்
Image Credit : Google

நிசான் கிராவைட் சிறப்பு அம்சங்கள்

காரின் கேபினில் கருப்பு மற்றும் வெள்ளை நிற டிசைனிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்டீரிங் வீல், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேலும் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் உள்ளிட்ட பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது.

55
நிசான் கிராவைட் மைலேஜ்
Image Credit : Google

நிசான் கிராவைட் மைலேஜ்

இது சுமார் 71 ஹார்ஸ்பவர் மற்றும் 96 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 5 வேக மேனுவல் மற்றும் AMT கியர் பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கின்றன. மைலேஜைப் பார்த்தால், மேனுவல் மாடலில் 19.3 கி.மீ/லிட்டர் மற்றும் AMT மாடலில் 19.6 கி.மீ/லிட்டர் வரை கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த காருக்கு CNG ஆப்ஷனும் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்
இந்தியாவில் MPV கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.2.15 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கார்களில் மெகா சலுகை.. நம்ப முடியாத ஆஃபர்
Recommended image2
Tata : டாடாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்... பாஸ்ட் சார்ஜிங், அதிக ரேஞ்ச் என எண்ணற்ற அம்சங்களுடன் வருது...!
Recommended image3
அச்சச்சோ..! ஸ்கூட்டர் விலை அதிரடி உயர்வு.. யமஹாவின் புதிய விலைப்பட்டியல் உள்ளே
Related Stories
Recommended image1
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?
Recommended image2
6 ஏர்பேக் கொண்ட இந்தியாவின் மிகக் குறைந்த விலை கார்.. விலை ரூ.5 லட்சம் கூட இல்லைங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved