MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 6 ஏர்பேக் கொண்ட இந்தியாவின் மிகக் குறைந்த விலை கார்.. விலை ரூ.5 லட்சம் கூட இல்லைங்க

6 ஏர்பேக் கொண்ட இந்தியாவின் மிகக் குறைந்த விலை கார்.. விலை ரூ.5 லட்சம் கூட இல்லைங்க

மாருதி சுசூகியின் செலெரியோ, 6 ஏர்பேக் வசதியுடன் கிடைக்கும் இந்தியாவின் மிகக் குறைந்த விலை காராக விளங்குகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் கிடைக்கும் இந்த கார், சிறந்த மைலேஜ் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 04 2026, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
6 ஏர்பேக் கொண்ட பட்ஜெட் கார்
Image Credit : Google

6 ஏர்பேக் கொண்ட பட்ஜெட் கார்

இன்றைய காலத்தில் கார் வாங்கும் போது முதலில் கவனம் செலுத்துவது பாதுகாப்பு அம்சங்களில்தான். குறிப்பாக காரில் எத்தனை பேர் உள்ளது, பாதுகாப்பு ரேட்டிங் எப்படி உள்ளது போன்ற விஷயங்களை வாங்குபவர்கள் முக்கியமாக பார்க்கிறார்கள். இந்த நிலையில், 6 ஏர்பேக் வசதியுடன் கிடைக்கும் மிகக் குறைந்த விலை கார் பற்றி பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் அந்த சாதனையை பெற்றிருப்பது மாருதி சுசூகியின் செலிரியோ (Celerio) மாடல் ஆகும்.

25
மாருதி சுசூகியின் செலிரியோ
Image Credit : maruti

மாருதி சுசூகியின் செலிரியோ

மாருதி சுசூகி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய செலிரியோ கார் புதுமையான டிசைனுடன் வந்துள்ளது. இளம் தலைமுறை மற்றும் நகரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் இந்த ஹேட்ச்பேக் உள்ளது. இந்த காரின் முக்கிய சிறப்பு என்னவென்றால், அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீடி ப்ளூ, க்ளிஸ்டனிங் கிரே, ஆர்க்டிக் ஒயிட், சில்க்கி சில்வர், சாலிட் ஃபயர் ரெட், காஃபின் பிரவுன், பியர்ல் ப்ளூஷ் பிளாக் போன்ற பல அழகான நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது. மேலும் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், சாலையில் உள்ள குழிகள் மற்றும் தடைகளை எளிதாக சமாளிக்க முடியும்.

Related Articles

Related image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Related image2
ஓலாவுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு
35
பாதுகாப்பான பட்ஜெட் கார்
Image Credit : maruti suzuki

பாதுகாப்பான பட்ஜெட் கார்

இந்த கார் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது. இது சுமார் 68.5 PS சக்தி மற்றும் 90 Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கிடைக்கின்றன. சில வேரியண்ட்களில் CNG ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. மைலேஜ் வகையில் பார்த்தால், பெட்ரோல் மாடல் சுமார் 25 கி.மீ/லிட்டர் மற்றும் சிஎன்ஜி மாடல் சுமார் 34 கி.மீ/கிலோ வரை மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது.

45
மாருதி செலிரியோ பாதுகாப்பு அம்சங்கள்
Image Credit : Google

மாருதி செலிரியோ பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களில் இந்த கார் சிறப்பாக திகழ்கிறது. அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக், ஏபிஎஸ், ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ஈஎஸ்சி), 3-பைண்ட் சீட் பெல்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் குடும்பங்களுக்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு பாதுகாப்பான தேர்வாக கருதப்படுகிறது. உள்ளமைப்பில் வசதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

55
ரூ.5 லட்சத்திற்குக் குறைவான விலை
Image Credit : Google

ரூ.5 லட்சத்திற்குக் குறைவான விலை

இந்த காரின் விலை மிகவும் போட்டித்தன்மையுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.4.69 லட்சம் முதல், சிஎன்ஜி மாடல் ரூ.5.97 லட்சம் முதல் கிடைக்கிறது. இஎம்ஐ வசதிகளும் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ரூ.50,000 முன்பணம் செலுத்தி வாகன கடன் எடுத்தால், சுமார் ரூ.9,385 மாத இஎம்ஐயுடன் 5 ஆண்டுகளுக்கு வாங்க முடியும். எனவே குறைந்த விலையில் பாதுகாப்பான, எரிபொருள் சிக்கனமான நகர ஹேட்ச்பேக் தேடும் பயனர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி செலிரியோ
குறைந்த விலை கார்கள்
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஓலாவுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு
Recommended image2
ஹோண்டா கார்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி! இனி ஷோரூம்களில் கூட்டம் அலைமோதப் போகுது!
Recommended image3
அதிரடி மாற்றங்களுடன் பட்டாசாய் களமிறங்கும் ஹூண்டாய் கிரெட்டா..!
Related Stories
Recommended image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Recommended image2
ஓலாவுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியல் வெளியீடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved