- Home
- டெக்னாலஜி
- Emergency Info: ஆபத்தில் உயிர் காக்கும் 'லாக் ஸ்கிரீன்' ரகசியம்: உங்க போனில் இதை ஆன் பண்ணீட்டிங்களா?
Emergency Info: ஆபத்தில் உயிர் காக்கும் 'லாக் ஸ்கிரீன்' ரகசியம்: உங்க போனில் இதை ஆன் பண்ணீட்டிங்களா?
Emergency Info: ஆபத்து காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும், அவசர காலத் தொடர்பு எண்கள் மற்றும் மருத்துவத் தகவல்களை லாக் ஸ்கிரீனிலேயே தெரியும்படி செய்யலாம். இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

போன் லாக் செய்தாலும் ஆபத்து காலத்தில் கவலையில்லை
சமீப காலமாக சாலை விபத்துகள், திடீர் மாரடைப்பு (Heart Attack) போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நேரங்களில் ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டால், அவருக்கு உதவுபவர்களோ அல்லது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களோ, அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொள்வது பெரும் சவாலாக இருக்கிறது. காரணம், பெரும்பாலானோரின் மொபைல் போன்கள் பாஸ்வேர்டு போட்டு லாக் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், உங்கள் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும், உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய முக்கியத் தகவல்களை லாக் ஸ்கிரீனிலேயே காட்டும் ஒரு அருமையான வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் உள்ளது. அதை எப்படி செட் செய்வது என்பது குறித்த விவரங்கள் இதோ.
அவசர நேரத்தில் இது எப்படி உதவும்?
விபத்து அல்லது மாரடைப்பு ஏற்படும்போது, உங்கள் போனை அன்லாக் செய்யாமலேயே, உங்களுக்கு உதவி செய்பவர்கள் உங்கள் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க முடியும். உங்கள் ரத்த வகை (Blood Group), உங்களுக்கு இருக்கும் அலர்ஜிகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றை போன் லாக் செய்யப்பட்டிருக்கும்போதே மருத்துவர்கள் பார்த்து, உடனடியாக சரியான சிகிச்சையைத் தொடங்க இது உதவும்.
லாக் ஸ்கிரீனில் எமர்ஜென்சி தகவல்களை சேமிப்பதற்கான எளிய வழிகள்
செட்டிங்ஸ் செல்லவும்: உங்கள் மொபைலில் உள்ள Settings ஆப்-க்குச் சென்று, அங்கு Safety அல்லது Emergency என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
தொடர்பு எண்ணைச் சேர்க்கவும்: உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்கள் என இரண்டு பேரின் அவசர காலத் தொடர்பு எண்களை (Emergency Contacts) அதில் சேர்க்கலாம்.
மருத்துவக் குறிப்புகளை எழுதவும்: உங்கள் ரத்த வகை, உங்களுக்கு இருக்கும் முக்கிய நோய்கள் அல்லது அலர்ஜிகள் குறித்த விவரங்களை இதில் குறிப்பிடவும்.
வசதியை ஆன் செய்யவும்: போன் லாக் செய்யப்பட்டிருக்கும்போதும் இந்தத் தகவல்கள் தெரிய, 'Enable lock-screen access' என்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்.
சோதித்துப் பார்க்கவும்: இறுதியாக, உங்கள் போனை லாக் செய்துவிட்டு, அன்லாக் செய்யாமலேயே அவசர காலத் தகவல்கள் (Emergency Info) தெரிகிறதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்
இந்த வசதியில் உங்கள் ரத்த வகை மற்றும் அவசர கால எண்களைத் தவிர, உங்கள் வங்கி விவரங்கள் அல்லது மற்ற ரகசியமான தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்ய வேண்டாம். உங்கள் போனிலும், உங்கள் குடும்பத்தினர் போனிலும் இந்த செட்டிங்கை மறக்காமல் ஆன் செய்து வையுங்கள். ஏனென்றால், வருமுன் காப்பதே சிறந்தது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

