- Home
- டெக்னாலஜி
- Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?
Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?
Why 10 Digit Mobile Number: நம்ம எல்லாரும் தினமும் போன் பயன்படுத்துறோம். ஆனா, நம்ம போன் நம்பர்ல ஏன் கரெக்டா 10 நம்பர் இருக்குன்னு எப்போவாச்சும் யோசிச்சிருக்கீங்களா? அதுக்கு பின்னாடி ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அது பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Why 10 Digit Mobile Number
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாத ஆட்களே இல்லை. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், நான்கு பேருக்கும் தனித்தனி போன் இருக்கிறது. போன் இல்லாமல் ஒரு நாள் கூட ஓடாது என்ற நிலைமைதான் இப்போது. போன் கால் பேசுவதில் இருந்து, ஆபீஸ் வேலை, ஆன்லைன் பில் கட்டுவது வரை எல்லாமே போனில் தான் செய்கிறோம். காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை நாம் அதிக நேரத்தை போனுடன் தான் செலவிடுகிறோம்.
போன் நம்பர் கதை என்ன தெரியுமா?
அப்படிப்பட்ட போனின் நம்பர் பற்றி எப்போதாவது யோசித்ததுண்டா? நம் நாட்டில் உள்ள எல்லா போன் நம்பர்களிலும் 10 இலக்கங்கள் மட்டுமே உள்ளன. ஏன் 10 எண்கள் இருக்க வேண்டும்? ஒன்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஏன் இல்லை? இப்படி பத்து இலக்கங்கள் இருக்க வேண்டும் என்று யார் முடிவு செய்தது? இதற்கான முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
மொபைல் நம்பரின் பின்னணிக் கதை இதுதான்
நம்மில் பலர் மொபைல் நம்பரைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருப்பார்கள். தங்களது லக்கி நம்பர் இருக்கிறதா, ஃபேன்ஸி நம்பரா எனப் பார்த்து வாங்குவார்கள். ஆனால், ஒரு டெலிகாம் நிறுவனம் நமக்கு நம்பர் ஒதுக்குவது, நம் நாட்டின் மக்கள் தொகையைச் சார்ந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? நம் நாட்டில் மொபைல் சேவைகள் தொடங்கிய புதிதில், அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால், போகப்போக அது பல மடங்கு அதிகரித்துவிட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் இலக்குகள் முடிவு
இப்போது ஒரு நபருக்கு ஒரு போன் நம்பர் என்ற நிலை உள்ளது. குறைவான இலக்கங்களில் போன் நம்பரை வடிவமைத்தால், பயன்பாடு அதிகரிக்கும்போது நம்பர்கள் பற்றாக்குறை ஏற்படும். புதிய எண்களைக் கொடுக்க வாய்ப்பு இருக்காது. ஆனால், பத்து இலக்க எண்ணாக வைத்தால், போன் பயன்படுத்தும் மக்கள் தொகை அதிகரித்தாலும் நம்பர்கள் தீர்ந்துவிடும் என்ற பயம் இருக்காது. புதிய எண்களை உருவாக்க வாய்ப்பு இருக்கும். இதனால்தான் டெலிகாம் இந்த முடிவை எடுத்தது.
மொபைல் நம்பரில் முதல் எண்
மொபைல் போன் பயன்பாடு தொடங்கிய ஆரம்ப காலத்தில், அனைவரின் போன் நம்பரும் 9 என்ற எண்ணில்தான் தொடங்கும். பின்னர் பயன்பாடு அதிகரித்ததும், இந்த சீரிஸ் மாறிவிட்டது. இப்போது 6, 7, 8, 9 போன்ற எண்களில் போன் நம்பர் தொடங்குகிறது. இப்படி இந்த எண்களில் மொபைல் நம்பர் தொடங்குவதால், மற்ற தொலைபேசி சேவை எண்களுக்கும், சாதாரண போன் நம்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய முடிகிறது.
10 இலக்க மொபைல் எண் முறை
மேலும், ஒரே நம்பரை இருவருக்கு ஒதுக்காமல் இருக்க மிகவும் கவனமாகச் செயல்படுகிறார்கள். இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண் முறை இருப்பதால்தான், இப்போது கோடிக்கணக்கான மக்கள் போன் நம்பர்களைப் பயன்படுத்தினாலும், புதிய எண்கள் வந்துகொண்டே இருக்கின்றன. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், யாராவது ஒரு நம்பரை நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் விட்டால் மட்டுமே, அந்த நம்பரை மற்றவருக்கு ஒதுக்குவார்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

