- Home
- டெக்னாலஜி
- சாதனங்கள்
- 7200mAh பேட்டரி, 50MP கேமரா: மிட்-ரேஞ்ச் போன் சந்தையை கலக்க வரும் ஒப்போ ரேனோ 17!
7200mAh பேட்டரி, 50MP கேமரா: மிட்-ரேஞ்ச் போன் சந்தையை கலக்க வரும் ஒப்போ ரேனோ 17!
இந்தியாவிற்கு ஓப்போ ரேனோ 17 ப்ரோ வரவில்லை? 7200mAh பேட்டரி, 3 50MP கேமராக்களுடன் வெளியாகும் ஒப்போ ரேனோ 17 சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஓப்போ ரேனோ 17 ப்ரோ இந்தியா அறிமுகம்
ஓப்போ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மிட்-ரேஞ்ச் போன்களான ஓப்போ ரேனோ 17 (Oppo Reno 17) மற்றும் ஓப்போ ரேனோ 17 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் சீனாவில் அறிமுகமாகவுள்ளன. இந்நேரத்தில், இந்தத் தொடரின் சர்வதேச வெளியீடு மற்றும் அம்சங்கள் குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சர்வதேச வெளியீடு & சிறப்பம்சங்கள்
ஓப்போ ரேனோ 17 ப்ரோ மாடல் சீனா அல்லாத பிற உலகளாவிய சந்தைகளிலும், இந்தியாவிலும் வெளியாக வாய்ப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன் அடிப்படை மாடலான ஓப்போ ரேனோ 17 சர்வதேச சந்தைகளில் அறிமுகமாகும் என்றும், அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
ஆப் - குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட்.
ஸ்கிரீன் - 6.5 அங்குல 1.5K ரெஸலூஷன் AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate).
பேட்டரி & சார்ஜிங் - 7,200mAh பேட்டரி மற்றும் 80W வேகமான ஒயர்டு சார்ஜிங் ஆதரவு.
இயங்குதளம் - ஆண்ட்ராய்டு 17 அடிப்படையிலான ஓப்போவின் புதிய ColorOS 17.
கேமரா அம்சங்கள்
ஓப்போ நிறுவனம் தனது வெய்போ (Weibo) பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ரேனோ 17 தொடரின் சீன மாடல்கள் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகிய 3 பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். மேலும், முன்புறத்தில் அகலமான கோணத்தில் செல்ஃபி எடுப்பதற்கு 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் சிறப்பம்சங்கள்
மேலும், இச்சாதனங்களில் 4K ரெஸலூஷன் வீடியோ பதிவு மற்றும் 6 வினாடிகள் வரை 4K வீடியோக்களைப் பதிவுசெய்யும் லைவ் போட்டோ (Live Photo) பயன்முறையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஓப்போ ரேனோ 17 தொடரானது சீனாவில் கோகோ பிரவுன் (Cocoa Brown), என்கவுண்டர் வித் தி கேட் (Encounter with the Cat), மற்றும் ஐஸ் மூன் வொயிட் (Ice Moon White) ஆகிய 3 நிறங்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.













