இந்தியாவில் அடுத்த ஆப்பிள் ஸ்டோர் வரப்போகுது.. எங்கு, எப்போது தெரியுமா?
இந்தியாவில் தனது ரீட்டெயில் இருப்பை ஆப்பிள் தீவிரமாக விரிவுபடுத்துகிறது. இது இந்தியாவில் ஐந்தாவது ஆப்பிள் ஸ்டோராக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் புதிய ஸ்டோர்
ஆப்பிள் இந்தியாவில் தனது ஆஃப்லைன் ரீட்டெயில் தடத்தை வேகமாக விரிவாக்கி வருகிறது. ஏற்கனவே பல முக்கிய நகரங்களில் கடைகள் திறந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் மேலும் ஒரு புதிய ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஆப்பிளின் மொத்த ரீட்டெயில் ஸ்டோர்கள் ஐந்தாக உயர்கின்றன. வருகிற ஆண்டு எந்த மாநிலங்களில் புதிய கடைகள் திறக்கப்படுகின்றன என்பதற்கான தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்திய சந்தையை ஆப்பிள் மிக முக்கியமானது பார்க்கிறது என்பதை இந்த அறிவிப்புகள் காட்டுகின்றன.
இந்தியாவில் ஆப்பிள் விரிவாக்கம்
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஸ்டோர் டிசம்பர் 11 அன்று நொய்டாவில், DLF Mall of India-யில் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் இது நிறுவனத்தின் மூன்றாவது ஸ்டோர். இந்தியாவின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தை என்பதால், தொடர்ந்து ஆஃப்லைன் ஸ்டோர்களைத் திறந்து வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பை பெருக்குவது ஆப்பிளின் முக்கிய திட்டமாகும். நொய்டா ஸ்டோர் மூலம் வட இந்தியாவில் ஆப்பிள் தனது ரீடெயில் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
ஆப்பிள் இந்திய வருவாய்
ஏப்ரல் 2023ல் திறக்கப்பட்ட இரண்டு முதல் ஸ்டோர்கள் முதல் ஆண்டிலேயே ரூ.800 கோடி வருமானம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. Tofler சமீபத்திய RoC பதிவுகளின்படி, ஆப்பிள் இந்தியாவின் FY25 வருவாய் 18.26% உயர்ந்து ரூ.79,378 கோடியாக உள்ளது. நிகர லாபம் 16.4% அதிகரித்து ரூ.3,196 கோடியாக உயர்ந்துள்ளது. FY26 மற்றும் FY27 ஆண்டுகளிலும் இதேபோன்ற வளர்ச்சி தொடரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

