MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Airtel: வெறும் ரூ.154 தான்! ஒரு வருஷத்துக்கு அன்லிமிடெட் கால்ஸ்.. ஏர்டெல் 'செம' பட்ஜெட் ஆஃபர்!

Airtel: வெறும் ரூ.154 தான்! ஒரு வருஷத்துக்கு அன்லிமிடெட் கால்ஸ்.. ஏர்டெல் 'செம' பட்ஜெட் ஆஃபர்!

Airtel:: ஏர்டெல் ஒரு புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ₹1,849-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் வசதி உள்ளது. இந்த பிளானில் வேறு என்ன வசதிகள் உள்ளன? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 08 2026, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஏர்டெல் மலிவு விலை பிளான்
Image Credit : stockPhoto

ஏர்டெல் மலிவு விலை பிளான்

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ரீசார்ஜ் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் கவலையைப் போக்க, ஒரு வருடம் முழுவதும் பயன்படும் மலிவு விலை திட்டத்தை ஏர்டெல் கொண்டு வந்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 41 கோடிக்கும் அதிகமானோர் ஏர்டெல் சிம் பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப, நிறுவனம் பல சூப்பரான திட்டங்களை வைத்துள்ளது. அந்த வரிசையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வருடாந்திர திட்டம் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
 ஏர்டெல் 1,849 ரூபாய் வருடாந்திர பிளான்
Image Credit : pinterest

ஏர்டெல் 1,849 ரூபாய் வருடாந்திர பிளான்

ஒவ்வொரு மாதமும் அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்து சோர்வாக இருக்கிறதா? அப்போ இந்த திட்டம் உங்களுக்குத்தான். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை வெறும் 1,849 ரூபாய் மட்டுமே. இந்த குறைந்த விலை திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு முழுதாக 365 நாட்கள், அதாவது ஒரு வருட வேலிடிட்டியை நிறுவனம் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் ஒரு வருடம் முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் (லோக்கல் & எஸ்டிடி) அன்லிமிடெட் கால்களை இலவசமாகச் செய்துகொள்ளலாம். பேலன்ஸ் தீர்ந்துவிடும் என்ற டென்ஷன் இல்லாமல், எவ்வளவு வேண்டுமானாலும் பேச இது ஒரு சூப்பர் வாய்ப்பு.

 ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டம், முக்கியமாக காலிங் வசதியை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சரியான சாய்ஸ். குறிப்பாக, வயதானவர்கள், இரண்டாவது சிம் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 1,849 ரூபாய் வருடாந்திர பிளானை மாதப்படி கணக்கு பார்த்தால் மாதத்துக்கு வெறும் 154 ரூபாய் தான் வருகிறது.

Related Articles

Related image1
Recharge Plan Under Rs 200: ரூ.200-க்குள் பெஸ்ட் ரீசார்ஜ் எது? ஜியோ vs ஏர்டெல் - எந்த பிளான் சிறந்தது தெரியுமா?
Related image2
Amazon: USB ஃபேன் முதல் மொபைல் ஹோல்டர் வரை.. 100 ரூபாய்க்குள் அமேசானில் கிடைக்கும் 5 கேட்ஜெட்ஸ்!
33
வெறும் காலிங் ஆஃபர் தேடுபவர்களுக்கு சூப்பர் பிளான்
Image Credit : x

வெறும் காலிங் ஆஃபர் தேடுபவர்களுக்கு சூப்பர் பிளான்

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், இது முற்றிலும் ஒரு 'வாய்ஸ் ஒன்லி' (Voice Only) ரீசார்ஜ் திட்டம். குறைந்த விலையில் ஒரு வருடத்திற்கு காலிங் வசதி தருவதால், இந்த திட்டத்தில் எந்த இன்டர்நெட் டேட்டா வசதியும் வழங்கப்படவில்லை. டேட்டா இல்லாமல், வெறும் காலிங் ஆஃபர் தேடுபவர்களுக்கு இது ஒரு 'பக்கா பைசா வசூல்' திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஏர்டெல்
மறுஊட்டத் திட்டங்கள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Smartphones Under 30000: 30 ஆயிரத்துக்குள் சூப்பர் போன் வாங்கணுமா? இந்த 4 மாடல்கள் செம சாய்ஸ்!
Recommended image2
Facts : மொபைல் போன் கலர், கலரா இருந்தாலும் சார்ஜர் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளையா இருக்கு? அதில் இவ்ளோ விஷயம் இருக்கா?
Recommended image3
OPPO Enco Air5 Pro: ₹5,000-க்குள் பிரீமியம் ஆடியோ மற்றும் சிறந்த ANC தொழில்நுட்பம்
Related Stories
Recommended image1
Recharge Plan Under Rs 200: ரூ.200-க்குள் பெஸ்ட் ரீசார்ஜ் எது? ஜியோ vs ஏர்டெல் - எந்த பிளான் சிறந்தது தெரியுமா?
Recommended image2
Amazon: USB ஃபேன் முதல் மொபைல் ஹோல்டர் வரை.. 100 ரூபாய்க்குள் அமேசானில் கிடைக்கும் 5 கேட்ஜெட்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved