- Home
- Tamil Nadu News
- திமுக பயந்த மாதிரியே ஆயிடுச்சு..!எடப்பாடி கூட்டத்தில் தவெக கொடி.. அதிரும் தேர்தல் களம்
திமுக பயந்த மாதிரியே ஆயிடுச்சு..!எடப்பாடி கூட்டத்தில் தவெக கொடி.. அதிரும் தேர்தல் களம்
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில், அதிமுக கூட்டத்தில் தவெகவினர் கலந்துகொண்டது, புதிய கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழக அரசியல் கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வரை 4 முனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக மட்டும் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. மேலும் பாமக மற்றும் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. நாம் தமிழர் கட்சியானது தனித்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. தற்போது புதிதாக அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய் தனி அணியாக உள்ளார்.
கரூரில் 41 பேர் பலி
கூட்டணிக்கு தனி அணியை உருவாக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் தற்போது வரை எந்த அரசியல் கட்சியும் தவெகவிற்கு கை கோர்க்கவில்லை. இதனால் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து திமுகவே மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதனால் திமுக கூட்டணி கட்சிகள் உற்சாகத்தில் இருந்தது.
அதற்கு ஏற்றார் போல விஜய்யும் அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கரூரில் விஜய் நடத்தி பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்தது.
விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, பாஜக
41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தவெக தலைமை ஆளுங்கட்சி திமுக மீது குற்றம்சாட்டி வருகிறது. உரிய போலீசார் பாதுகாப்பு வழங்காதது, குறுகிய இடம் வழங்கியது என காரணம் கூறி வருகிறது. ஆனால் தமிழக அரசோ கரூரில் மக்கள் அதிகளவு கூடும் இடங்கள் வழங்கப்பட்டதாகவும், விஜய்யின் காலதாமதமான வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் நெருக்கடியான நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அதிமுக மற்றும் பாஜக விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த விஜய் பாஜக - அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டத்தில் தவெக
இதற்கு ஏற்றார் போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட மக்களை மீட்போம்.. தமிழகத்தை காப்போம் என்ற பிரச்சார கூட்டத்தில் தவெக கொடியோடி இளைஞர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தரும்புரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்திருந்த நிலையில் தவெக கொடியோடி இளைஞர்கள் அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக- தவெக இணைய கூடாது என திமுக திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அதிமுகவோடு தவெக நெருங்கி வருவது திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே திமுக பயந்த மாதிரியே தவெகவினர் அதிமுக கூட்டணியில் இணைய அக்கட்சி தொண்டர்கள் நேரடியாக ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.