திரிஷா வீட்டிற்குள் அதிகாலையில் திடீரென புகுந்த போலீஸ்.! இதுதான் காரணமா.?
பிரபல நடிகை த்ரிஷாவின் சென்னை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி என தெரியவந்தது.

தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் வெடி குண்டு வெடிக்கும் என வரும் தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பள்ளிகளில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு குறிப்பிட்ட மணி நேரத்தில் வெடிக்கும் என்ற எச்சரிக்கையால் அலறி அடித்து மாணவர்களை வெளியேற்றும் நிகழ்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரங்கேறியது. ஒரே நேரத்தில் பல மாணவர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதால் அசாதாரண சூழ்நிலையானது நிகழும்.
இதே போல முதலமைச்சர் வீடு, எதிர்கட்சி தலைவர் வீடு, ஆளுநர் மாளிகை, ரயில் நிலையம் போன்ற இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என அவ்வப்போது மர்ம தகவலால் அச்சமான நிலை நீடிக்கும்.
உடனடியாக போலீசாரும் மோப்ப நாய் உதவியோடு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொள்வார்கள். அதன்பிறகு அது புரளி என தெரியவரும். இதே போல ஒரு சம்பவம் இன்று காலையிலேயே பொதுமக்களை அச்சம் அடைய செய்துள்ளது. அந்த வகையில் பிரபல நடிகை நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை திரிஷா, இவர் கடைசியாக நடிகர் கமல்ஹாசனுடன் தக்லைப் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதே போல சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர், பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்படுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.