- Home
- Tamil Nadu News
- பக்கா சினிமாக்காரர் என நிரூபித்த விஜய்..! 8 45 க்கு நாமக்கலில் இருக்க வேண்டும் ஆனால் வீட்டில் இருந்து புறப்பட்டதே 8:45க்கு தான்..
பக்கா சினிமாக்காரர் என நிரூபித்த விஜய்..! 8 45 க்கு நாமக்கலில் இருக்க வேண்டும் ஆனால் வீட்டில் இருந்து புறப்பட்டதே 8:45க்கு தான்..
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் மூலம் அரசியலில் இறங்கியுள்ளது திராவிட கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று நாமக்கல்லில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். விஜய்யின் வருகைக்காக நாமக்கல்லில் காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரமாக தொடங்கி உள்ளது. தமிழகத்தில் எப்போதும் திமுக அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய்,
தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் சூட்டிய விஜய் விக்ரவாண்டியை தொடர்ந்து மதுரையில் இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தி உள்ளார்.
இந்த இரண்டு மாநாட்டு கூட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் கூடினார்கள். விஜயின் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்த்து திராவிட கட்சிகளே அதிர்ச்சியில் உள்ளனர். அதிலும் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களே பல லட்சங்களில் திரண்டிருப்பது திமுக அதிமுகவை திக்குமுக்காட வைத்துள்ளது.
இந்த நிலையில் தான் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 180 நாட்களுக்கு மட்டுமே உள்ள நிலையில் மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளார் விஜய், அந்த வகையில் தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கினார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பொதுமக்களை சந்திக்க விஜய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரக்கடை பகுதிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு மணி நேரம் வாகனத்தில் சென்றார். அந்த அளவிற்கு விஜயை வரவேற்று பல ஆயிரம் தொண்டர்கள் கூடியிருந்தனர். இதன் காரணமாக அன்றைய தினம் பெரம்பலூரில் நடைபெற இருந்த கூட்டத்தில் பேச முடியாத நிலையானது உருவானது.
இதே போல கடந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை கூறினார். மேலும் அந்த, அந்த தொகுதிகளில் செயல்படுத்தாத திட்டங்களையும் பட்டியலிட்டு ஷாக் கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று நாமக்கல் மற்றும் மற்றும் கரூரில் விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக காலை 8. 45 மணிக்கு நாமக்கலில் தனது பிரச்சாரத்தை பேசம் வகையிலும் கரூரில் மதியம் 12 மணிக்கு பேசி இருப்பதாகவும் தவெக சார்பாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் விஜய் காலை 8. 45 மணிக்கு தான் சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட விஜய் காலை 9.30 மணி அளவில் திருச்சியை வந்தடைந்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகவே சினிமாக்காரர்களின் அதாவது பெரிய ஹீரோக்கள் மற்றும் பிரபலமான நடிகர்களின் பழக்கமாகவே உள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு முன் கூட்டியே சென்றால் மவுசு இருக்காது என்பதற்காகவே வேண்டும் என்றே காலதாமதமாக செல்லும் நிலையானது பழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தான் விஜய் இன்றைய நாமக்கல் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்ல உள்ளார். சுமார் 92 கிலோ மீட்டர் காரில் பயணம் செய்யும் விஜய் நாமக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் காரில் இருந்து பிரச்சார வாகனத்திற்கு மாறவுள்ளார்,
வளையபட்டி, வேப்பநத்தம் ஆகிய பகுதிகளில் விஜய்க்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கேஎஸ் தியேட்டர் அருகே காலை 11 மணிக்கு விஜய் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் வருகைக்காக காலை 6 மணி முதலே மக்கள் நாமக்கல்லில் கூடியுள்ளனர்.