- Home
- Politics
- விஜய்க்கு பயந்து செந்தில் பாலாஜி செய்த காரியம்... கரூரில் இனி திமுக காலி..! ஆர்ப்பரிக்கும் தவெக..!
விஜய்க்கு பயந்து செந்தில் பாலாஜி செய்த காரியம்... கரூரில் இனி திமுக காலி..! ஆர்ப்பரிக்கும் தவெக..!
நாலு தொகுதிகள் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர் அராஜகம் செய்கிறார் என்கிறார்கள். விஜய்க்கு தனிப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களது ஒட்டு மொத்த குடும்பத்தினரும் தவெகவுக்கு வாக்களிக்க தயராக இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். நாகப்பட்டினம், திருவாரூரை அடுத்து கரூர் பிரச்சாரம் குறித்து பொதுமக்கள், அரசியல் விமர்சகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மதியம் சுமார் 12 மணிக்கு கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்டில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பு காலை நாமக்கல் மாவட்டத்தில் சேலம் சாலையில், கே.எஸ். தியேட்டர் பகுதியில் அவர் பேச உள்ளார். கரூரில் தவெக பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தை எதிர்பார்த்து, சாலைகளில் பதாகங்கள், கட்சி கொடிகள் அலங்கரித்துள்ளது. பொதுமக்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட விஜய் படத்துடன் தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்.
கரூர் காவல்துறை ஆரம்பத்தில் அனுமதி கொடுக்க காலம் தாழ்த்தியது விஜயை பார்த்து திமுக அச்சம் கொள்வதாக விமர்சிக்கப்பட்டது. விஜயின் பிரச்சாரங்கள் ஏற்கனவே பெரிய கூட்டங்களை ஈர்த்துள்ளன. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இதுகுறித்து விஜயின் தீவிர ரசிகரான டைகர் சுந்தர் கூறுகையில், ‘‘விஜய் கேட்ட இடம் கொடுக்கவில்லை. ரவுண்டானா கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கே இடம் கம்மியாக இருக்கிறது. விஜய் வருவதால் தான் இடமே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாலு தொகுதிகள் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர் அராஜகம் செய்கிறார். ஆனால் விஜய் கரூர் வந்தால் இரண்டு தொகுதியிலாவது நாங்கள் வெற்றி பெறுவோம். திருச்சி சென்ற போது அதை தனது கோட்டையாக மாற்றி விட்டார் விஜய். நாகப்பட்டினம் சென்றபோதும் தனது கோட்டையாக மாற்றி விட்டார்.
அதேபோல கரூரையும் தனது கோட்டையாக மாற்றுவார். செந்தில் பாலாஜி நான்கு தொகுதியை வைத்திருக்கிறார். நாங்கள் எப்படியாவது இரண்டு தொகுதிகளாக வாங்குவோம். பூவே உனக்காக படம் பார்த்தேன். அதில் இருந்து விஜய் ரசிகராக மாற்றி விட்டேன். பூவே உனக்காக படம் வெளிவந்த போது நான் காதலித்துக் கொண்டிருந்தேன். அப்போது முதல் விஜயை பிடிக்கும். அவர் வசனம் பேசுவது, டான்ஸ் ஆடுவது என விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது கல்யாணத்துக்கு நான் சென்று வந்தேன். அவர் கோயம்புத்தூர் வரும்போது அவருக்கு கை கொடுத்தேன். விஜய் நடிகர் என்பதற்காக சொல்லவில்லை. ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
2026-ல் தலைவர் விஜய் வருகிறார். தவெக ஆட்சியாளும். இது உறுதி. தமிழகத்தை தவெக ஆளும். எங்கள் வீட்டில் என் மனைவியில் இருந்து என் மகன்கள் வரையில் அனைவரும் விஜய் ரசிகர்கள் தான். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனி எல்லாம் விஜய்தான்’’ எனத் தெரிவித்துள்ளார். விஜய்க்கு தனிப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்ல, அவர்களது ஒட்டு மொத்த குடும்பத்தினரும் தவெகவுக்கு வாக்களிக்க தயராக இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.