- Home
- Tamil Nadu News
- ரொம்ப.. ரொம்ப மன்னிச்சிடுங்க..! உங்க தம்பியா நினைச்சுக்கோங்க.. வீடியோ காலில் உருகிய விஜய்.. வெளிவந்த தகவல்
ரொம்ப.. ரொம்ப மன்னிச்சிடுங்க..! உங்க தம்பியா நினைச்சுக்கோங்க.. வீடியோ காலில் உருகிய விஜய்.. வெளிவந்த தகவல்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை வீடியோ காலில் தொடர்பு கொண்ட தவெக தலைவர் விஜய் அவர்களுடன் உருக்கமாக பேசி தனது ஆறுதலை வெளிப்படுத்தி வருகிறார்.

கரூர் துயர சம்பவம்
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அசம்பாவிதம் நடைபெற்று 10 நாட்களைக் கடந்த நிலையிலும் தமிழகம் முழுவதும் இது தான் தற்போது வரை ஹாட் டாபிக்காக உள்ளது.
10 நாட்களாகியும் வெளி வராத விஜய்
சம்பவம் தொடர்பாக விஜய் தவிர்த்து தவெக.வின் முக்கிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். முக்கிய தலைவர்கள் தலைமறைவான நிலையில் விஜய் சம்பவம் நடைபெற்ற நாள் முதல் தற்போது வரை வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யை நெருக்கும் அரசியல் தலைவர்கள்
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும், அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களை வீடியோ காலில் தொடர்பு கொண்டு தனது ஆறுதலைத் தெரிவித்து வருகிறார். இதற்காக மாவட்டத் தலைவர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தெய்வம் மா நீங்க..🙏🫡 #TVKVijaypic.twitter.com/HT7w7LZgc5
— Sadiq Basha (@SadiqBasha_) October 5, 2025
வீடியோ காலில் ஆறுதல் கூறும் விஜய்
அந்த வகையில் கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் தாயாரை தொடர்பு கொண்ட விஜய் சுமார் 20 நிமிடங்கள் உரையாடி தனது ஆறுதலைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “உங்கள் தம்பியாக நினைத்து என்னை மன்னித்துவிடுங்கள். கரூருக்கு வரமுடியாத சூழலில் நான் சென்னை வந்துவிட்டேன். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விரைவில் வருகிறேன். உங்கள் இழப்ப தாங்க முடியாத இழப்பு. ரொம்ப ரொம்ப மன்னிச்சுக்கோங்க ரொம்ப பணிவா கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
ரொம்ப ரொம்ப மன்னிச்சுக்கோங்க..
ரொம்ப பணிவா கேட்டு கொள்கிறேன்னு விஜய் சொன்னாரு 💔🥲 pic.twitter.com/7LbE4SUVc5— Pokkiri_Victor (@Pokkiri_Victor) October 8, 2025