- Home
- Tamil Nadu News
- யூடன் அடித்து மீண்டும் அதிமுகவில் இணையும் வைத்தியலிங்கம்! ஆஃபரை அள்ளி வீசிய இபிஎஸ்!
யூடன் அடித்து மீண்டும் அதிமுகவில் இணையும் வைத்தியலிங்கம்! ஆஃபரை அள்ளி வீசிய இபிஎஸ்!
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை அடுத்து, மற்றொரு முக்கிய நிர்வாகியான வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் போட்டி போடுகின்றன.

ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து பல அணிகளாக சிதறி போய் கிடைக்கிறது. குறிப்பாக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இவர்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.
ஒருங்கிணைப்பு பேச்சுக்கே இடமில்லை
தொடர் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டுமே வெற்றி என்று ஓபிஎஸ், பாஜக, கே.சி.பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பு பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். குறிப்பாக ஒருங்கிணைப்பு என்று பேச்சை எடுத்தாலே மூத்த நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது மட்டுமல்லாமல் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் டெல்டாவை மேலும் வலுப்படுத்த திமுகவின் அடுத்த டார்கெட் ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் தான் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கான வேலையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷேிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
வைத்திலிங்கம்
இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி மற்றொரு புறம் வைத்திலிங்கத்தை அதிமுகவில் இணைக்கும் வேலைகளை ரகசியமாக செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. அதிமுகவில் அவருக்கு துணைபொதுச்செயலர் பதவி வழங்குவதாக, இபிஎஸ் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. அவரை கட்சியல் சேர்க்கும் பொறுப்பை அரசு அதிகாரிகள் சிலரிடம் ஒப்படைத்துள்ளார் இபிஎஸ். அதில் உடன்பாடும் எட்டப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் மீண்டும் வைத்திலிங்கம்
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைத்திலிங்கம் நலம் பெற்று வீடு திரும்பியதும் அதிமுகவில் மீண்டும் இணைவார் என வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கு.ப.கிருஷ்ணனும் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.