MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விஜயை சந்திக்கிறார் ராகுல் காந்தி..! உறுதியாகும் தவெக- காங்கிரஸ் கூட்டணி..? திமுக கையிலெடுக்கும் ப்ளான்-B

விஜயை சந்திக்கிறார் ராகுல் காந்தி..! உறுதியாகும் தவெக- காங்கிரஸ் கூட்டணி..? திமுக கையிலெடுக்கும் ப்ளான்-B

இதுகுறித்த தகவலை திமுகவின் உளவுத்துறை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் வெளியேறினால் கூட்டணியை சமாளிக்க தேவையான 'பிளான் பி' திட்டங்களைத் திமுக கையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Nov 13 2025, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது கட்சியை 2024-ல் தொடங்கியதிலிருந்து, அவர் பாஜகவை கொள்கை எதிரி என்றும் திமுகவை அரசியல் எதிரி என்றும் கூறி வருகிறார். அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். அதிமுகவுடன் முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாலும் பாஜக கூட்டணியுடன் இணைந்து விட்டதால் விஜய் என்.டி.ஏ கூட்டணியுடன் அமைக்க மறுத்து வருகிறார்.

இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரவீன் சர்க்கரவத்தியுடன் விஜய்யுடன் சந்திப்பு நடத்தி இருப்பதாகவும், இம்மாதம் கடைசி வாரத்தில் ராகுல் காந்தியை விஜய் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

தவெக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு எனவும் அழைப்பு விடுத்திருந்தார் விஜய். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாகவும் இருந்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போதும் ராகுல் காந்தி நேரடியாகவே விஜய்யுடன் தொலைபேசியில் ஆறுதல் கூறி இருந்தார். காங்கிரஸ் கட்சியினரும் ஆட்சியில் பங்கு என்கிற கோஷத்தை தமிழகத்தில் முன்னெடுத்து வருகின்றனர். முன்பைவிட அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

2011ல் சுமார் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருக்கிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால், காங்கிரஸில் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

காமராஜர் குறித்த திமுகவின் பேச்சால் கோபமடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக கூட்டணிக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினர். காங்கிரஸ் எம்.பி., மணிக்கம் தாக்கூர், விஜயை தமிழத்தில் முக்கிய சவாலாக மாறி வருகிறார் என்று கூறினார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள தவெகவுடன் கூட்டணி அமைத்தால் அதிக சீட்டுகள் ஆட்சியில் பங்கு கிடைக்கலாம் என்பதை விரும்புகின்றனர்.தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

34
Image Credit : Rahul Gandhi/X

தவெக கூட்டணி குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி விவகாரம் குறித்து முடிவு எடுக்கலாம் என ராகுல் கூறியுள்ளதாகத் தகவல். விஜய் தலைமையிலான தவெக கட்சி, 2026 தேர்தலில் குறைந்தபட்சம் காங்கிரசுக்கு 60 தொகுதிகளை தருவதாகவும், துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு தர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்தால் குறைந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் தவெக உடன் இணைந்தால் ஆட்சியில் பங்கு என புதிய கதவுகள் திறக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். விஜயின் பிரபலம் வாக்கு வங்கியாக மாறும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது.

இதுகுறித்த தகவலை திமுகவின் உளவுத்துறை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் வெளியேறினால் கூட்டணியை சமாளிக்க தேவையான 'பிளான் பி' திட்டங்களைத் திமுக கையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் வெளியேறினால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தொகுதிகளைப் பிரித்து அளிப்பது குறித்தும், புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

44
Image Credit : Asianet News

ஒருவேளை திமுக கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால், காங்கிரஸில் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகின்றனர். இதற்கான சில பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிக இடங்களை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் இந்த முயற்சிகளை அறிவாலயமும் தெரிந்தே வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இடையிலான நட்பு காரணமாக, காங்கிரஸ் கட்சி கூட்டணியைவிட்டு வெளியேற வாய்ப்புகள் குறைவு என்றே கணிக்கப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
இந்திய தேசிய காங்கிரஸ்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
கூட்டணி கட்சியினரின் நலனுக்காக.. திமுக அரசின் பேராசையால் அவதிப்படும் தமிழக பயணிகள்.. அண்ணாமலை சாடல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved