- Home
- Tamil Nadu News
- கிழிய கிழிய பேசிய உனக்கு திமுக ஆட்சியில் மட்டும் வாயில் புண்ணா..? மரியாதையா பேசு கோபாலு..! வெளுத்தெடுக்கும் தவெக!
கிழிய கிழிய பேசிய உனக்கு திமுக ஆட்சியில் மட்டும் வாயில் புண்ணா..? மரியாதையா பேசு கோபாலு..! வெளுத்தெடுக்கும் தவெக!
TVK Loyola Mani: பத்திரிக்கையாளர் போர்வையில் திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் கோபால், முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்திக்காததை கேள்வி கேட்காமல், கரூர் சென்ற விஜய்யை விமர்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மக்களை சந்தித்து மனம் விட்டு பேசிய எங்கள் தலைவரின் செயலைக் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வரும் நக்கீரன் கோபால் அவரை கண்டிக்கிறேன் என லயோலா மணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மிஸ்டர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கம். உங்களை பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். பத்திரிக்கையாளர்கள் பொது வெளியில் இப்படி அநாகரிகமாக பேச மாட்டார்கள்.
பல கோடி மக்கள் தலைவராகவும், அண்ணனாகவும் ஏற்றுக் கொண்டுள்ள அண்ணன் விஜய் அவர்களை வாடா, போடா என்று பேசுவதும், அவரை பற்றி அவதூறு பரப்புவதும் என்ன மாதிரி செயல்? மனநிலை? வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் நீங்களெல்லாம் பேசலாமா? பத்திரிக்கையாளர் போர்வையில் நடமாடும் கொத்தடிமை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் நீங்கள் வாய் கிழிய கிழிய பேசினீர்கள். ஆனால் இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியில் வாய் கிழிய கிழிய பேச மறுப்பது ஏன்? நீண்ட நாட்களாக வாயில் புண்ணா? மரியாதை கொடுத்தால் மட்டும்தான் கிடைக்கும். தானாக மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு உங்கள் நடத்தை ஒழுங்காக இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்றுவரை நேரில் சந்திக்கவில்லை. வேங்கை வயல் மக்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்றுவரை பார்க்கவில்லை. காவல் மரணம் அடைந்த அஜித் குமார் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் இன்றுவரை நேரில் சந்திக்கவில்லை. அதற்காக முதல்வரை அவன், இவன் என்று பேச முடியுமா? பேசுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அப்படி பேசினால் அது தவறு. தயவு செய்து பத்திரிக்கையாளர் என்ற பெயரில் மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்த வேண்டாம். உங்கள் நடத்தையும், உங்கள் பேச்சும் இழிவாக இருக்கிறது. கரூர் மக்களை சந்தித்து மனம் விட்டு பேசிய எங்கள் தலைவரின் செயலைக் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வரும் நக்கீரன் கோபால் அவரை கண்டிக்கிறேன். வார்த்தையை யோசித்து பேசுங்கள். வாய்க்கு வந்தபடி பேசுவது தவறு. வாடா போடா ன்னு பேசாதடா கோபாலுலுலு என தெரிவித்துள்ளார்.