- Home
- Tamil Nadu News
- காலையிலேயே பரபரப்பு! தவெகவின் தலைமை அலுவலகத்தில் குவிந்த போலீஸ்! வெளியான அதிர்ச்சி காரணம்!
காலையிலேயே பரபரப்பு! தவெகவின் தலைமை அலுவலகத்தில் குவிந்த போலீஸ்! வெளியான அதிர்ச்சி காரணம்!
TVK Office Bomb Threat: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது ஒரு புரளி எனத் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு முக்கிய அமைப்புகள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பான இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் வீடு
அதாவது முதலமைச்சர் வீடு, எதிர்க்கட்சித் தலைவர் வீடு, டிஜிபி அலுவலகம், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகங்கள், அரசு அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் என தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளன.
2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள்
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனைக்கு பிறகு அது புரளி என்பது தெரிய வருகிறது. தமிழக காவல்துறையில் நவீன தொலைதொடர்பு கண்காணிப்பு, வலுவான சைபர் கிரைம் அமைப்புகள் உள்ளிட்டவை இருந்தும் இந்தச் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்த மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் சர்வ சாதாரணமாக விடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளன.
தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவியுடன் தவெக தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த தகவலை அடுத்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் குவிந்தனர். பின்னர் சோதனை முடிவில் அது புரளி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.