- Home
- Tamil Nadu News
- அதிமுகவில் இருந்து நீக்கப்படும் செங்கோட்டையன்! சிதறப்போகும் வாக்கு வங்கி! தட்டித்தூக்க தயாராகும் விஜய்.. பாஜக!
அதிமுகவில் இருந்து நீக்கப்படும் செங்கோட்டையன்! சிதறப்போகும் வாக்கு வங்கி! தட்டித்தூக்க தயாராகும் விஜய்.. பாஜக!
AIADMK Vote Bank: அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு இபிஎஸ் பிடிவாதமே காரணம். ஓபிஎஸ், டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்ததால் அவர் நீக்கப்படலாம், கட்சி ஒன்றுபடவில்லை என்றால் வாக்கு வங்கி சிதறி பாஜக, விஜய் போன்றோருக்கு சாதகமாகும்.

AIADMK
சட்டமன்றம், உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே காரணம். பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என ஓபிஎஸ், சசிகலா, கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிற நிலையில் இயக்கத்தின் எதிர்காலம், கட்சி மற்றும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவரும் விட்டுக்கொடுத்து இயக்கத்தை ஒன்றுபடுத்துகிற முயற்சியில் இறங்க வேண்டும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
KC Palanisamy
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வம், TTV.தினகரன் சந்திப்பு நடந்திருக்கிறது". இதன் எதிரொலியாக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சந்திப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை ஒன்றுபடுத்தி விடலாம் என்று நினைக்கமாட்டார். மாறாக, செங்கோட்டையனையும் கட்சியை விட்டு நீக்கி விடலாம் என்று மட்டுமே யோசிப்பார்.
TVK Vijay BJP
புரட்சி தலைவி அம்மா அவர்கள் மறைந்து 8 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அதிமுக கட்சிக்கு தலைவர் உருவெடுக்கவில்லை. தலைவராக உருவெடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல், பிளவுகள் இல்லாமல் எல்லோரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து, வழிநடத்தும் பண்பும் இல்லை. இந்த இரண்டும் தான் அதிமுக கட்சியின் பலவீனத்துக்கு காரணமாக உள்ளது. எது எப்படியோ ஒன்றுபட்ட அதிமுக கட்சி உருவாக வேண்டும். இது நடக்காவிட்டால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறும், இதை பயன்படுத்தி கொள்ள விஜய்யும் பாஜகவும் தயாராக இருக்கிறார்கள்.
Edappadi Palanisamy
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிற நிலையில் இயக்கத்தின் எதிர்காலம், கட்சி மற்றும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவரும் விட்டுக்கொடுத்து இயக்கத்தை ஒன்றுபடுத்துகிற முயற்சியில் இறங்க வேண்டும். கட்சியை ஒருங்கிணைக்க சென்ற ஆண்டு நான் எடுத்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்நேரம் ஒரு வலிமையான அதிமுக கட்டமைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.