- Home
- Tamil Nadu News
- விஜய் வந்தாலே மாநாடு தான்.. விஜய்யை முதல்வருடன் கம்பேர் பண்ணாதீங்க.. நீதிபதி அதிரடி
விஜய் வந்தாலே மாநாடு தான்.. விஜய்யை முதல்வருடன் கம்பேர் பண்ணாதீங்க.. நீதிபதி அதிரடி
TVK Stampede: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு டாப் ஸ்டார், அவரை முதல்வருடன் எப்படி ஒப்பிட முடியும் என கரூர் மாவட்ட நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தவெக நிர்வாகிகள்
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள் உட்பட 41 தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளான மதியழகன், பொன்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் இருவரும் கரூர் மாவட்ட நிர்வாகி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி முன்பாக விளக்கம் அளித்த அரசு தரப்பில், “தமிழக வெற்றி கழகத்தினர் கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் உள்ளிட்டவை இருப்பதால் அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஒப்புதலுடன் கட்சி நிர்வாகிகளை அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பின்னரே அனுமதி வழங்கப்பட்டது. வேலுசாமி புரத்தை தேர்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தார்.
விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம்
கட்சியின் தலைவர் விஜய் நேரத்தை கடைபிடிக்காததே விபத்துக்கு காரணம். கூட்டம் அதிகம் உள்ளது வாகனத்தை வேகமாக இயக்குங்கள் என்று சொன்னபோது மாவட்ட நிர்வாகிகள் வேண்டுமென்றே வாகனத்தை மெதுவாக இயக்கச் செய்தனர். மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு மாற்று பாதையில் வாகனம் இயக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட இடத்தை வாகனம் அடைந்த பின்னரும் வாகனத்தை முன்னோக்கி நகர்த்தி நிர்வாகிகள் விதி மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
விஜய்யை பார்க்க 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் என எப்படி சொன்னீர்கள்..?
அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, “விஜய் ஒரு டாப் ஸ்டார் அவரை முதல்வருடன் ஒப்பிட முடியாது. அண்மையில் இதே பகுதியில் தான் எதிர்க்கட்சி தலைவரின் பிரசார கூட்டம் நடைபெற்றதாக சொல்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமியை பார்ப்பதற்கு அவரது கட்சி நிர்வாகிகள் மட்டுமே வருவார்கள். ஆனால் விஜய் ஒரு டாப் ஸ்டார் அவரை பார்ப்பதற்கு குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் வருவார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? அப்படி இருக்கையில் எப்படி 10 ஆயிரம் நபர்கள் மட்டும் வருவார்கள் என்று கூறி அனுமதி கேட்டீர்கள்?
14ம் தேதி வரை காவலில் அடைக்க உத்தரவு
விஜய் பிரசாரத்திற்கு வந்தாலே அதற்கு மாநாடு போல தான் கூட்டம் வரும். அளவு கடந்த கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் இது தொடர்பாக சொல்லப்பட்டதா? கூட்டம் அளவு கடந்து சென்ற போதும் நிர்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்?” என நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்த நிர்வாகிகள், “சனிக்கிழமை சம்பள தினம் என்பதால் அதிகமான கூட்டம் வராது என நினைத்து 10 ஆயிரம் நபர்கள் கூடுவார்கள் என்று கூறி அனுமதி கேட்டோம். இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. காவல் துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. காவல் துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம்” என்று தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கைது செய்யப்பட்ட இருவரையும் அக்டோபர் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.