- Home
- Tamil Nadu News
- ஏறிய வேகத்தில் ஒரே நாளில் இறங்கிய தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? சந்தோஷத்தில் இல்லத்தரசிகள்
ஏறிய வேகத்தில் ஒரே நாளில் இறங்கிய தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? சந்தோஷத்தில் இல்லத்தரசிகள்
சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் தக்காளியின் விலை சமீபத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு கோயம்பேடு சந்தையில் விற்பனையாகிறது. வெங்காயம் உட்பட பிற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

சமையலில் தக்காளி, வெங்காயம்
சமையல் என்றாலே முக்கிய தேவையாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயம், அந்த வகையில் ரசம் முதல் பிரியாணி சமைப்பதற்கு தக்காளி, வெங்காயத்தின் பங்கு அதிகமாக உள்ளது. தக்காளி உணவுக்கு இயற்கையான புளிப்பு, இனிப்பு சுவையை அளிக்கிறது. குழம்பு, சாம்பார், ரசம், கறி, சட்னி போன்றவற்றில் தக்காளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
தக்காளியில் வைட்டமின் C, A, K, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் லைகோபீன் உள்ளன, இவை உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. இது உணவின் ஊட்டச்சத்து மதிப்பை உயர்த்துகிறது. எனவே பல வகையிலும் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விலையை தொட்டது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சமையலில் தக்காளியின் பயன்பாட்டை குறைத்தனர்.
சமையலில் தக்காளியின் பங்கு
எனவே தக்காளி விலையானது எப்போதும் குறையும் என காத்திருந்தனர். இதற்கு ஏற்றார் போல தக்காளியின் விலையும் கடந்த சில மாதங்களாக குறைய தொடங்கியது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சந்தோஷத்தில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள் பை நிறைய தக்காளியை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் தான் தக்காளியின் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையானது மேலும் உயரும் என்ற தகவலும் வெளியானது. ஆனால் திடீரென நேற்று தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளி விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி விலை என்ன.?
ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு சந்தையில் 50 ரூபாயில் இருந்து 15 ரூபாய் குறைந்து 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த விலையானது தொடர்ந்து குறையுமா.? அல்லது நாளைய தினமே அதிகரிக்க வாய்ப்புள்ளதா.? என்பதை தக்காளி வரத்தை பொறுத்தே கணிக்க முடியும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல வெங்காயத்தின் விலையும் கடந்த ஆண்டு ஒரு கிலோ 180 ரூபாயை தொட்டது. இதனையடுத்து நாசிக் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததையடுத்து விலை சரிந்தது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதிகரிக்கும் பச்சை காய்கறிகள் விலை
இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்து வருகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,
பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காய்கறி விலை நிலவரம்
வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,
பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது. இதனிடைய பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது