- Home
- Tamil Nadu News
- சரசரவென சரிந்த தக்காளி விலை.! போட்டி போட்டு அள்ளும் இல்லத்தரசிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா?
சரசரவென சரிந்த தக்காளி விலை.! போட்டி போட்டு அள்ளும் இல்லத்தரசிகள்- ஒரு கிலோ இவ்வளவு தானா?
கடந்த மாதங்களில் உச்சத்தை தொட்ட தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தற்போது சரிந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் போட்டி போட்டு காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

சமையலும் காய்கறிகளும்
சமையலில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, காய்கறிகள் சத்துக்கள் நிறைந்தவை மட்டுமில்லாமல் உணவுக்கு சுவையையும் வண்ணத்தையும் சேர்க்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு உணவு முறைகளில், காய்கறிகள் பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சாம்பார், குழம்பு, பொரியல், சாலட் ஆகியவற்றில் காய்கறிகளின் தேவை அதிகமாக உள்ளது.
இதில் முக்கியமாக தக்காளி மற்றும் வெங்காயம் தான் அத்தியாவசிய காய்கறிகளாக உள்ளது. காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் வாங்கும் முதல் பொருளாகவும் உள்ளது. எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை பொறுத்து மக்கள் அதிகமாகவோ குறைவாகவோ வாங்குவார்கள்.
தக்காளியும் வெங்காயமும்
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மட்டும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாயை தாண்டியது. இதே போல வெங்காயத்தின் விலையும் புதிய உச்சமாக ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறைவான அளவே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனையடுத்து சில வாரங்களில் தக்காளி விலையானது சரிந்தது. விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பை நிறைய தக்காளியை வாங்கி சென்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் அண்டை மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக பெரும் அளவில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மீண்டும் தக்காளி விலை உயர்ந்தது. ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஏறி இறங்கும் தக்காளி விலை
இந்த விலையானது அடுத்த சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது. அந்த வகையில் 50ரூபாய்க்கு குறைந்து தற்போது ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 4 முதல் 5 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் தற்போது 18 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் போட்டி போட்டி காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். அதே நேரம் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,
கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது