- Home
- Tamil Nadu News
- பெட்டி பெட்டியா தக்காளி... மூட்டை மூட்டையாக வெங்காயம்..! லாரியில் குவியும் காய்கறிகள்! ஒரு கிலோ எவ்வளவு.?
பெட்டி பெட்டியா தக்காளி... மூட்டை மூட்டையாக வெங்காயம்..! லாரியில் குவியும் காய்கறிகள்! ஒரு கிலோ எவ்வளவு.?
Today Vegetable Price: தக்காளி மற்றும் வெங்காயம் விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறிகளின் விரிவான விலை பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரைக்காய் விலை உச்சம்.

சமையலும் காய்கறிகளும்
சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காய்கறிகள் தான். ரசம் முதல் பிரியாணி சமைப்பதற்கு தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளை விட இந்த தக்காளி, வெங்காயத்தை மட்டுமே மக்கள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இதன் காரணமாகவே மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளி சந்தையில் குவிந்தது. மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
தக்காளி
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஏறிய தக்காளி விலையானது மீண்டும் குறைய தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தக்காளி விலை தற்போது ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
குறைந்தது வெங்காயம் விலை
இதேபோல் வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பால் மூட்டை மூட்டையாக வெங்காயம் காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. இதன் காரணமாக வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதே நேரம் இல்லத்தரசிகள் வெங்காயத்தை பை நிறைய வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 20 முதல் 26 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம் கூவி, கூவி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை என்ன என்பதை பார்ப்போம்.
காய்கறிகள் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் 1 கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 23 முதல் 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 முதல் 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் அவரைக்காய்
கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மாங்காய் விலை
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 முதல் 66 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், மாங்காய் 60 முதல் 80 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 50 முதல் 66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

