- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்குமாம்! அலர்ட் கொடுத்த கையோடு ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்குமாம்! அலர்ட் கொடுத்த கையோடு ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னையில் பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூலை 11 முதல் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று முதல் ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.