- Home
- Tamil Nadu News
- நாட்டிலே வெயில் மதுரையில் தான் அதிகமாம்! குளுகுளுனு மாறப்போகுதாம் சென்னை! மழை குறித்து வெதர்மேன் அப்டேட்!
நாட்டிலே வெயில் மதுரையில் தான் அதிகமாம்! குளுகுளுனு மாறப்போகுதாம் சென்னை! மழை குறித்து வெதர்மேன் அப்டேட்!
தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பிரதீப் ஜான், கடல் காற்று நகருக்குள் வரத் தொடங்கியதால் வெப்பநிலை குறையும், மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தென் மற்றும் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 13 இடங்களில் வெயில் சதம் அடித்தது. நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று மதுரை விமான நிலைய பகுதிகளில் 106.16 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் மதுரை நகரம் 104.36 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், தூத்துக்குடி 102.56 டிகிரி, சென்னை நங்கம்பாக்கம் 102.38, நாகை 101.84, ஈரோடு 101.48, வேலூர் 101.66, திருத்தணி 101.3, கடலூர், திருச்சி 100.58, பரமத்தி வேலூர், தஞ்சாவூர் 104 டிகிரி ஃபாரன்ஹூட் பதிவானது.
நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அதாவது வடபழனி, கோடம்பாக்கம், கே.கே. நகர், வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், முகலிவாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் மழை குறித்து பிரதீப் ஜான் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பலத்த காற்று வீசுவதால், கடல் காற்று நகரத்திற்குள் செல்ல முடியவில்லை. நேற்று இரவு 8 மணிக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், இன்று கடல் காற்று வடக்குப் பக்கத்தில் நகரத்திற்குள் வரத் தொடங்கியுள்ளது. மேலும் நிறைய மழை மேகங்கள் உருவாகி உள்ளன. இந்த மழை மேகங்கள் கடல் காற்றுடன் தொடர்பை ஏற்படுத்தி ஈரப்பதத்தைக் கொண்டு வருவதால், மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் சென்னையில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸில் இருந்து 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதியை முழுவதும் புயல்கள் சூழ்ந்துள்ளன. வரவிருக்கும் மழைக்காலத்திலிருந்து நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் KTC மழை பெய்யும். தெற்கு சென்னை புறநகர் பகுதிகளுக்கு மிகவும் தேவையான மழை பெய்யும். காஞ்சிபுரம் முதல் செங்கல்பட்டு மற்றும் மகாபலிபுரம் வரை என தெரிவித்துள்ளார்.