- Home
- Tamil Nadu News
- 100 சவரன் நகை! 37 லட்சத்தில் சொகுசு கார்! திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி! யார் இந்த கவிதா?
100 சவரன் நகை! 37 லட்சத்தில் சொகுசு கார்! திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி! யார் இந்த கவிதா?
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கவிதா, திருமணமான சில மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்தார். வரதட்சணை கொடுமை மற்றும் சந்தேகத்திற்குரிய காயங்கள் குறித்து பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வரதசட்ணை கொடுமையால் அடுத்தடுத்து பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் திருப்பூரில் ரிதன்யா (27) என்பவர் 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்த நிலையில் வரதசட்ணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் லோகேஸ்வரி என்பவர் திருமணமான 4 நாட்களிலேயே வரதசட்ணை டார்ச்சரால் விபரீத முடிவு எடுத்தார். இந்நிலையில் தமிழகத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி வேல்விழி. இவரது மகள் கவிதா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். ஆன்மீகச் சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுபேத்தி ஆவார். இந்நிலையில் கவிதாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான ஓம் கணபதியின் மகன் நாகார்ஜுன் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. நாகர்ஜூன் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் மனைவியை அழைத்து செல்லாமல் சென்னையில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
திருமணத்தின் போது வரதட்சணையாக 100 சவரனும், மாப்பிள்ளைக்கு 13 சவரன் நகையும், வைர மோதிரம், 37 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், இரண்டரை லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை ராணுவத்தில் இருந்து திரும்பியதும் சென்னையில் மருத்துவமனை கட்டி மருத்துவ தொழில் செய்யப்போவதாகவும் கூறிவந்தனர். கடந்த ஜூன் 10ம் தேதி அன்று மணமக்கள் ஜபல்பூர்க்குச் சென்றுள்ளனர்.
அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் மாமனார் கவிதாவின் தந்தையை தொடர்பு கொண்டு உங்களுடைய மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக தனது மகன் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து கவிதாவின் பெற்றோர்கள் விமானம் மூலம் பெங்களூருவுக்கு சென்ற அங்கு ஏற்கனவே காத்திருந்த சம்மந்தி ஓம் கணபதியுடன் ஜபல்பூர் ராணுவ மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது எவ்வித அசைவின்றி இருந்துள்ளார். சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஜூன் 11ம் தேதி ஜபல்பூர் ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து கவிதாவின் உடலை மாப்பிள்ளை வீட்டார் சென்னை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கவிதாவின் உடலை திண்டுக்கல்லில் உள்ள உங்கள் வீட்டிற்கு கொண்ட செல்லவில்லையா என்று தட்சணாமூர்த்தி கேட்டுள்ளார். அப்போது உங்கள் மகளை நீங்களே நல்லடக்கம் செய்யுங்கள் நாங்கள் விட்டு தருகிறோம் என கூறியுள்ளனர்.
பின்னர் பெண்ணின் பெற்றோர் மகளின் உடலை சென்னைக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர். மாப்பிள்ளை நாகார்ஜுன் அவரது குடும்பத்தினரும் கவிதா வீட்டிலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் மாப்பிள்ளையின் நடத்தையில் பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜபல்பூர் காவல்நிலையத்திலும், சென்னை கோயம்பேடு காவல் நிலையத்திலும் கவிதாவின் தந்தை புகார் அளித்திருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கவிதாவுக்கு தலையில் இரண்டு இடங்களில் பலத்த காயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த காயம் அவர் மயங்கி கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் என கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மயங்கி விழுந்தால் ஒன்று பின் மண்டையில் அடிபடும் அல்லது உட்பக்க மணடடையில் அடிபடும் அது எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் அடிப்பட்டது என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். பெண் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனை கட்ட இடம் வாங்கி தர சொல்லி வற்புத்திதாகவும் அது தரவில்லை என்பதனால் தனது மகளை உளவியல் ரீதியாக துன்புறுத்தி, கடைசியில் கொலையே செய்துவிட்டதாக கவிதாவின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.