MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் கவலைப்பட தேவையில்லை.! எடப்பாடி கையில் தான் அதிமுக இருக்கு- போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்

விஜய் கவலைப்பட தேவையில்லை.! எடப்பாடி கையில் தான் அதிமுக இருக்கு- போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்

விஜய் வாய்க்கு வந்ததை வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவை தவிர எடப்பாடியாருக்கு எந்த பின்னடைவு ஏற்படப் போவதில்லை என ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 22 2025, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுகவை விமர்சித்த தவெக
Image Credit : Asianet News

அதிமுகவை விமர்சித்த தவெக

தவெக மாநாட்டில் பேசிய விஜய், அதிமுக நிலையை நினைத்து அக்கட்சி நிர்வாகிகள் வேதனையில் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை முக்தீஸ்வரன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது, அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடியார் அடுத்த வாரம் முதல் வாரத்தில் மதுரை, தேனி ,திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

 கட்சி தொடங்கியவர்கள் மாநாடு நடத்தலாம், ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அவர்கள் பேசும்பொழுது அவர்கள் மீது நம்பிக்கை வர வேண்டுமே தவிர வருத்தம் இருக்கக் கூடாது. மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கள்ள மாட்டார்கள் இன்றைக்கு அதிமுக மக்களுக்காக சேவை செய்யும் இயக்கமாகும்.

24
திமுக பாயசம் டூ பாய்சன்
Image Credit : Google

திமுக பாயசம் டூ பாய்சன்

விஜய் தற்பொழுது மாநாட்டில் திமுகவை பாய்சன் என்று கூறுகிறார், போன மாநாட்டில் பாயசம் என்று கூறினார், அடுத்த மாநாட்டில் அமுது என்று கூட பேசுவார்.இன்றைக்கு புரட்சித் தலைவரை தவிர்த்து விட்டு யாரும் கட்சியை நடத்த முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது, இன்றைக்கு அதிமுக எடப்பாடியாரின் கையில் தன் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம் .

கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலலில் எடப்பாடியாரை வைத்து தான் தேர்தலை சந்தித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தான் முதலமைச்சர் வேட்பாளர், இன்றைக்கு தேசியக் கட்சியில் உள்ள அமித்ஷாவே எடப்பாடியார் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார் இதுதான் கள நிலவரம் இதில் விஜய்க்கு எந்த சந்தேகம் வேண்டாம்.

Related Articles

Related image1
'மரத்தை நட்டா உடனே பழம் கிடைக்காது'... தவெக-வுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இபிஎஸ்!
Related image2
விஜய் என்ன அவதார புருஷனா..? அவரை நம்பி நாங்க இல்ல..!- கடுகடுக்கும் அதிமுக..!
34
வாய்க்கு வந்ததை பேசும் விஜய்
Image Credit : Asianet News

வாய்க்கு வந்ததை பேசும் விஜய்

இன்றைக்கு விஜய் வாய்க்கு வந்ததை வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவை தவிர எடப்பாடியாருக்கு எந்த பின்னடைவு ஏற்படப் போவதில்லை, எடப்பாடியார் அற்புதமான குணம் படைத்தவர் ,ஆற்றல், பண்பும் மிக்கவர் ஆனால் இன்றைக்கு விஜய் ஒன்றரை வருட குழந்தை தான். கட்சி நடத்தலாம், 

மாநாட்டை நடத்தலாம் ஆனால் மக்களை நாங்கள் தான காப்பாற்ற போகிறோம் என்பது போல பேசுவது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 75 ஆண்டுகள் உள்ள திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் என்றால் அதிமுகவால் தான் முடியும் என்று தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தெரிகிறது நேற்று கட்சி தொடங்கிய விஜய்க்கு தெரியவில்லை.

44
ராணுவ கட்டுப்பாட்டோடு அதிமுக
Image Credit : TVK

ராணுவ கட்டுப்பாட்டோடு அதிமுக

இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் வேதனையாக உள்ளார்கள் என்று கூறுகிறார் .விஜய்க்கு எப்படி தெரியும் அப்படி என்றால் உங்களிடத்தில் எந்த தொண்டர்களும் கூறினார்களா ? அப்படி யார் சொன்னார்கள் என்று நீங்கள் சொல்லுங்கள் அதற்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். இன்றைக்கு அதிமுக தொண்டர்களையும், தமிழக மக்களையும் காப்பாற்ற தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி எடப்பாடியார் உழைத்து வருகிறார்கள். அதிமுகவின் வாக்கு வங்கியை யாரும் சிதைக்க முடியாது ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக வாக்கு வங்கி உள்ளது அதிமுக பற்றி விஜய் கவலைப்பட வேண்டாம் தனது தொண்டர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடியார் கூறி வருகிறார் இன்றைக்கு பிஜேபி, சீமான், விஜய், பாமக, தேமுதிக, போன்ற கட்சிகள் எல்லாம் திமுகவை எதிர்த்து வருகிறது. இன்றைக்கு திமுகவிற்கு 65 சகவீதம் எதிர்ப்பு உள்ளது, ஆதரவு 35 சதவீதம் தான் உள்ளது திமுக குடும்ப கட்சியை ஆட்சி வரக்கூடாது இதுதான் மக்கள் எண்ணமாகும் என ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
அரசியல்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
'மரத்தை நட்டா உடனே பழம் கிடைக்காது'... தவெக-வுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இபிஎஸ்!
Recommended image2
விஜய் என்ன அவதார புருஷனா..? அவரை நம்பி நாங்க இல்ல..!- கடுகடுக்கும் அதிமுக..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved