MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Tiruttani Aadi Krithigai 2026: திருத்தணி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்க போறீங்களா? அனுமதி பெறுவது எப்படி? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Tiruttani Aadi Krithigai 2026: திருத்தணி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்க போறீங்களா? அனுமதி பெறுவது எப்படி? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Annadanam Permission: ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகருக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கிருத்திகை, சஷ்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 17 2026, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : highlightsofindia Instagram

ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்குரிய வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் மாரியம்மன், காளியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் கோவில்களில் திருவிழாக்களும், சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமல்ல தமிழ் கடவுளான முருகருக்கு உகந்த மாதம். அதாவது கிருத்திகை, சஷ்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : our own

இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 04 முதல் 08ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடிக்கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.

Related Articles

Related image1
Today Horoscope: ஆடி 1ல் எந்த ராசிக்கு யோகம்? யார் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசி பலன் இதோ
Related image2
Zodiac sign: சத்தமில்லாமல் சாதித்துக் காட்டுவதில் இந்த 5 ராசிக்காரர்கள் கில்லாடிகள்
35
Image Credit : Asianet News

அன்னதானம் வழங்க விரும்புவோர் ஜூலை 18 முதல் 28ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் சமர்பித்து அனுமதி பெறவேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர்கள் தங்களை சார்ந்த அன்னதானம் விநியோகிப்பவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை தகவலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

45
Image Credit : our own

(தகவலுக்கு இணை ஆணையர் /செயல் அலுவலர், தலைமை அலுவலகம், அரக்கோணம் சாலை, திருத்தணி அவர்களை அணுகவும்) எக்காரணத்தை கொண்டும் ஜூலை 30 தேதிக்கு பின்னர் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் வழங்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடம், அனுமதி பெறப்பட்ட நாள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது. உணவு பொருட்கள் கலப்படம் இல்லாமல் தரமானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

55
Image Credit : our own

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது. உணவு கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு ஏதுவாக குப்பைப்தொட்டிகளை வைத்து அதில் உணவு கழிவுகளை சேகரித்து, அன்னதானம் அளிப்பவர்களே சேகரித்த உணவு கழிவுகளை அவ்வப்போது அகற்றுவதுடன் அன்னதானம் வழங்கிய இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க இயலாது. மேலும் போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக 9489279217, 9578726302 ஆகிய இந்த இரண்டு எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோவில்
திருவிழாக்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Horoscope: ஆடி 1ல் எந்த ராசிக்கு யோகம்? யார் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசி பலன் இதோ
Recommended image2
ஆடி மாதம் 'இந்த' 4 ராசிக்கும் அசுர வளர்ச்சிதான்! கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் துலங்கும்!
Recommended image3
Zodiac sign: சத்தமில்லாமல் சாதித்துக் காட்டுவதில் இந்த 5 ராசிக்காரர்கள் கில்லாடிகள்
Related Stories
Recommended image1
Today Horoscope: ஆடி 1ல் எந்த ராசிக்கு யோகம்? யார் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசி பலன் இதோ
Recommended image2
Zodiac sign: சத்தமில்லாமல் சாதித்துக் காட்டுவதில் இந்த 5 ராசிக்காரர்கள் கில்லாடிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved