‘ ’அதிமுக தொண்டர்கள் மனவேதனையுடன் உள்ளார்கள் என்பது விஜய்க்கு எப்படி தெரியும்? எந்த அதிமுக தொண்டரிடம் விஜய் பேசினார்? யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம்'’

மதுரை, பாரபத்தியில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் ‘‘தமிழக அரசியலில் எம்ஜிஆர் ஒரு மாஸ். அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இன்று யார் கட்டிக் காப்பது? அந்த கட்சி இப்போது எப்படி உள்ளது. அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள்.தமிழக அரசியலில் எம்ஜிஆர் ஒரு மாஸ். அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இன்று யார் கட்டிக் காப்பது? அந்த கட்சி இப்போது எப்படி உள்ளது. அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள்.தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது... தமிழ்நாடு ஒட்டுமா? பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ள உலக மகா ஊழல் கட்சி அதிமுக’’ எனப்பேசியிருந்தார்.

இதற்கு அதிமுக கடும் எதிர்வினையாற்றி வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘தவெக தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார். தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம்.

ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணாவையும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார். அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தவெக தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார்.

கட்சியை ஆரம்பித்த உடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைப்பது கனவு. அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் மனவேதனையுடன் உள்ளார்கள் என்பது விஜய்க்கு எப்படி தெரியும்? எந்த அதிமுக தொண்டரிடம் விஜய் பேசினார்? யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம்'’ என்று அவர் கூறியுள்ளார்.