- Home
- Tamil Nadu News
- தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! அன்புமணிக்கு வார்னிங் கொடுத்த ராமதாஸ்
தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! அன்புமணிக்கு வார்னிங் கொடுத்த ராமதாஸ்
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. ராமதாஸ், அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு தடை கோரியுள்ளார். மேலும், அன்புமணி தன்னைத் தலைவர் என்று கூறிக்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணிக்கு இடையே அதிகார மோதல் உச்சமடைந்துள்ளதால் அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. கட்சிக்கு உரிமை கோரி இரண்டு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 25 முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்தப்படும் என அன்புமணி அறிவித்திருந்தார். இந்த சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் தனது அனுமதி இல்லாமல் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வியாழன்கிழமை அன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ள ராமதாஸ் மே மாதம் முதல் பாமகவின் தலைவர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி. சிறப்பு பொதுக்குழுவின்படி பாமகவின் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறி கொண்டால் நடவடிக்கை பாயும் என தெரிவித்துள்ளார்.
பனையூரில் பாமக தலைமையகம் இருப்பதாக சொல்வது தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். சென்னையில் இருந்து செயல்பட்டு வந்த பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுகிறது.
இதையடுத்து வேறு எங்கும் பாமகவுக்கு தலைமை அலுவலகம் இல்லை என்பதை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வேறு இடங்களில் பாமக தலைமையகம் என்று வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது. அன்புமணியின் பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே காவல்துறை அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.