- Home
- Tamil Nadu News
- என்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது! அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்!
என்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது! அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் இருவரும் தனித்தனி அணியாக செயல்படுகின்றனர். ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர், அன்புமணி தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது. ராமதாஸ் மகன் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்தார். இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதன்பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என தொடர் அறிவிப்புகள் வெளியிட்டு வந்தன. குறிப்பாக தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது கேவியட் மனுக்களை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் VSகோபு தாக்கல் செய்துள்ளார். அதில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தரப்பில் கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.