- Home
- Tamil Nadu News
- சென்னை
- அதிகாலையிலேயே தலைநகரை அலறவிடும் அமலாக்கத்துறை! மருத்துவர் தொழிலதிபர் வீட்டில் சோதனை!
அதிகாலையிலேயே தலைநகரை அலறவிடும் அமலாக்கத்துறை! மருத்துவர் தொழிலதிபர் வீட்டில் சோதனை!
தமிழகத்தில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வரி ஏய்வு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் அவ்வப்போது அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கோவை மாவட்டம் சூலுார் செலக்கரிச்சலை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). ஜவுளி மற்றும் கோழிப்பண்ணை உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது மகன் வெங்கடேஷ் திமுக மாணவரணி ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், வங்கிகளில் பெற்ற கடனை ஒரே நேரத்தில் ராமச்சந்திரன் செலுத்தியதாகவும், அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தலைநகர் சென்னையில் அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா, வேளச்சேரியில் உள்ள கட்டுமான தொழிலதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இவர் மீது பல கோடி ரூபாய் மோசடி புகார் இருக்கக்கூடிய நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் சோதனை நடைபெறுகிறது. மேலும் மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.