MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சொன்னாலும் ஒன்னும் புரிய போறது கிடையாது! வெள்ளை அறிக்கை கொடுத்தா மட்டும் விளங்கிவிடுமா? EPS-ஐ விளாசும் TRP ராஜா

சொன்னாலும் ஒன்னும் புரிய போறது கிடையாது! வெள்ளை அறிக்கை கொடுத்தா மட்டும் விளங்கிவிடுமா? EPS-ஐ விளாசும் TRP ராஜா

எதுவும் அறியாமலும்-புரிந்து கொள்ளத் தெரியாமலும் சொந்தக் கட்சிப் பிரச்சினைகளால் கோமாவில் இருந்து திடீரென விழித்து, ‘அன்னைக்கு காலையில 6 மணிக் இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு..’ என்று எதிர்க்கட்சித் தலைவர், சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

3 Min read
vinoth kumar
Published : Sep 10 2025, 08:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை. ஆனால், ஒப்பந்தம் போட்டுவிட்டு எதையுமே செய்யாத உங்களின் உதவாக்கரை ஆட்சி என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்: முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் 10 ஆண்டுகால சீர்கெட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு என்று பெயரைக் கேட்டாலே தொழில் முதலீட்டாளர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருந்த நிலையை மாற்றி முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கடந்த நான்காண்டுகளில் தொழில்துறையில் தமிழ்நாட்டை உயர்வான நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சலுடன் அறிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவரின் அறியாமையைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

26
Image Credit : x/trb rajaa

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களால் எவ்வளவு முதலீடு வந்தது என்று ‘திரும்பத் திரும்ப பேசும்’ அரசியல் களத்தின் வடிவேலுவாகியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். முதலமைச்சர் தன்னுடைய ஜெர்மனி-இங்கிலாந்து பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே முந்தைய வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகளாக மாறி, எங்கெங்கே தொழில்நிறுவனங்கள், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஊடகங்களிடம் தெளிவாக விளக்கிவிட்டுத்தான் புறப்பட்டார். இது எதுவும் அறியாமலும்-புரிந்து கொள்ளத் தெரியாமலும் சொந்தக் கட்சிப் பிரச்சினைகளால் கோமாவில் இருந்து திடீரென விழித்து, ‘அன்னைக்கு காலையில 6 மணிக் இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு..’ என்று எதிர்க்கட்சித் தலைவர், சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய கேள்விகளுக்கு தொழில்துறை மானியக் கோரிக்கையிலும், அதன்பிறகு பல அறிக்கைகளிலும் தெளிவாக பதில் தரப்பட்டுள்ளது. சேக்கிழார் எழுதிய இராமாயணத்தைப் படித்தவருக்கு தொழில்துறையின் அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்குப் புரியும் என்றும் தெரியவில்லை.

Related Articles

Related image1
போடு தகிட தகிட! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகும் கனமழை!
Related image2
சென்னையில் காதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட திரிஷா! இறுதியில் நடந்த அதிர்ச்சி! கதறும் பெற்றோர்கள்! நடந்தது என்ன?
36
Image Credit : x/trb rajaa

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலமைச்சர் இதற்கு முன் பயணித்த ஐக்கிய அரபு நாடுகளில் 6 ஒப்பந்தங்கள், 6100 கோடி முதலீடு, சிங்கப்பூர் 1 ஒப்பந்தம், 312 கோடி முதலீடு, ஜப்பான் 7 ஒப்பந்தங்கள், 1030 கோடி முதலீடு, ஸ்பெய்ன் 3 ஒப்பந்தங்கள் 3440 கோடி முதலீடு, அமெரிக்கா 19 ஒப்பந்தங்கள் 7616 கோடி ரூபாய் முதலீடு எனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த 36 ஒப்பந்தங்களில் Yield Engineering Services, Infinix Services, Rockwell Automation உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையை எட்டிவிட்டன. 11 நிறுவனங்களின் நில எடுப்பு- கட்டுமானப்பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்பட்டு அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

46
Image Credit : x/trb rajaa

அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை. ஆனால், ஒப்பந்தம் போட்டுவிட்டு எதையுமே செய்யாத உங்களின் உதவாக்கரை ஆட்சியைப் போல இல்லாமல், நீங்கள் போட்ட ஒப்பந்தங்களையும் நம் தமிழ்நாட்டுக்கான முதலீடுகளாக மாற்றும் முயற்சியை முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல உங்களின் அமெரிக்க பயணத்தின் லட்சணம் பல்லைக் காட்டுகிறது. 2019ஆம் ஆண்டு முதலீடுகளை ஈரப்பதற்காக அன்றைய முதலமைச்சராக அமெரிக்காவுக்கு சென்ற நீங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 27. இதன் மூலம் 5087 கோடி ரூபாய் முதலீடு கிடைக்குமென்றும் 24,720 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் சொன்னீர்கள். ஆனால், உண்மை நிலையைத் தேடினால், ஒப்பந்தம் போடப்பட்ட ரூ.5087 கோடியில் 25% முதலீடு கூட வரவில்லை.

56
Image Credit : Google

தமிழ்நாட்டை விட மகாராஷ்ட்ரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கு அதிக முதலீடுகள் வந்திருப்பதாக சொல்வதிலும் உண்மையில்லை. தொழில்துறையைப் பொறுத்தவரை, அந்நிய நேரடி முதலீட்டுத் தரவுகள் என்பவை முழுமையானவை அல்ல என்பதை பல முறை தெரிவித்திருக்கிறோம். ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்தில் தலைமையகம் உள்ளதோ அந்த மாநிலத்தின் பெயரில்தான் அந்நிய நேரடி முதலீடு கணக்கு காட்டப்படும். தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியத் தலைமையகம் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்தால் அந்த மாநிலங்களுக்குரியதாக தரவுகள் காட்டும். ஆனால், ஒப்பந்தம் செய்த தமிழ்நாட்டிற்குதான் அந்த முதலீடு இறுதியில் நிலம்,கட்டிடம், இயந்திரங்கள் என வந்தடைந்து வேலைவாய்ப்புகள் உருவாகும். இது பற்றி பல முறை தெளிவுபடுத்தியும் விளக்கம் கேட்பது விளக்கெண்ணெய்த்தனமாக இருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே.சொன்னாலும் புரியப்போவதில்லை. சொந்தமாகவும் தெரிந்துகொள்ளப் போவதில்லை என்கிற நிலைமையில் உள்ள உங்களுக்கு வெள்ளை அறிக்கை கொடுத்தால் மட்டும் விளங்கிவிடுமா என்ன?

66
Image Credit : x/trb rajaa

இறுதியாக ஒன்று, தொழில்துறை சார்ந்த விளக்க அறிக்கைகள் சமூக வலைத்தளப் பக்கத்தில்தான் வெளியாகிறது என்று சொல்லும் உங்களின் அறிக்கையும் சமூக வலைத்தளத்தில்தான் பதிவிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கை எழுதித் தருபவரிடம் அடுத்த முறை மறக்காமல் ஞாபகப்படுத்திவிடுங்கள். தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி குறித்து தெளிவாகப் பல முறை அறிக்கை வெளியிட்டும் அதைப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லை. நான் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற முறையில் ஒரு வெள்ளைத் தாளை வீணடிக்க விரும்பவில்லை என்பதை, இனி பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது என்று சொல்லிவிட்டு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் வெள்ளைக்கொடி வேந்தருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
அரசியல்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved