- Home
- Tamil Nadu News
- சென்னையில் காதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட திரிஷா! இறுதியில் நடந்த அதிர்ச்சி! கதறும் பெற்றோர்கள்! நடந்தது என்ன?
சென்னையில் காதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட திரிஷா! இறுதியில் நடந்த அதிர்ச்சி! கதறும் பெற்றோர்கள்! நடந்தது என்ன?
சென்னையில் லாட்ஜில் தங்கியிருந்த காதல் ஜோடிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், ஆண் சோழவரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பெண் சென்னையில் தூக்கிட்டு இறந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராபின் (23). 10ம் வகுப்பு வரை படித்த ராபின், எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் சென்னையில் ராப்பிடோ மூலம் பைக் டாக்சி ஓட்டி வந்துள்ளார். ராபின் சென்னையில் வேலை செய்து வந்த போது சென்னை அண்ணாநகரை சேர்ந்த திரிஷா (20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் வேலைக்கு செல்லுமாறும் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காதலர்கள் இருவரும் சென்னை வேப்பேரியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சோழவரம் அருகே உள்ள தமது வீட்டிற்கு திரும்பி வந்த ராபின் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோழவரம் போலீசார் ராபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராபினின் பெற்றோரிடம் ராபின் காதல் விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சென்னை விடுதியில் ராபினின் காதலி திரிஷாவும் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதலர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காதலியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு அதன் பின்னர் ராபின் சோழவரத்தில் தமது வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா? காதலி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.