- Home
- Tamil Nadu News
- ஒரே இரவில் மரண பயத்தை காட்டிய இடியுடன் கூடிய மழை! அடுத்த 3 மணிநேரத்தில்! டெல்டா மாவட்டங்களும் அலறப்போகுதாம்!
ஒரே இரவில் மரண பயத்தை காட்டிய இடியுடன் கூடிய மழை! அடுத்த 3 மணிநேரத்தில்! டெல்டா மாவட்டங்களும் அலறப்போகுதாம்!
தமிழகத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருவதும் இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்தது.
அதன்படி விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கர இடி, மின்னலுடன் கூடிய கனமழை விடாமல் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.