MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க! எகிறி அடிக்கும் இபிஎஸ்!

தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க! எகிறி அடிக்கும் இபிஎஸ்!

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுகவினர் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக பெயர் மாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 10 2025, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த மேற்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Google

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, கோவை குனியமுத்தூர் தொகுதி மக்களிடம் உரையாற்றுகையில் MLA எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சி SP வேலுமணி தான் என்றார். அதிமுக மக்கள் கட்சி, திமுக கருணாநிதி குடும்பத்தின் கட்சி. அதிமுகவில் உழைப்பவர்கள், தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்புக்கு வரமுடியும். திமுகவில் அப்படி வரமுடியுமா? கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்து இப்போது இன்பநிதியாம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். அதிமுகவில் சாதாரண நபர்கூட முதல்வராகலாம். திமுகவில் இப்படி ஸ்டாலின் சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

35
Image Credit : our own

மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது. அதனால் வீடுவீடாகச் சென்று கெஞ்சிக் கூத்தாடி கையெழுத்து வாங்குகிறார்கள். இந்த அவல நிலையில் திமுக இருப்பதை மறந்து விட்டு அதிமுகவைப் பற்றி பேசுறார் உதயநிதி. அதிமுக ஐசியுவில் இருக்கிறதாம், திமுக தான் ஐசியுவில் இருக்கிறது. திமுக ஊழலின் ஊற்றுக்கண். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு.

45
Image Credit : our own

பாஜகவுடன் கூட்டணி வைத்ததைப் பற்றியே பேசுகிறார்கள். மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பது அதிமுக நிலை, ஊழல் அரசான திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். இரண்டு கட்சிக்கும் ஒரே கருத்து என்பதால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம். அதிமுக பாஜக கூட்டணி வைத்ததுமே திமுக பயந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. போதை விற்பனை அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் அடிமையாகி அழிவுப்பாதையில் செல்கிறது. சட்டமன்றத்தில் பலமுறை சொல்லிப்பார்த்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது சொல்கிறார். சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. இந்த ஆட்சி இருக்கும் வரை அவரவர் குடும்பத்தை அவரவர் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

55
Image Credit : Google

அதிமுக ஆட்சியில் கோவையில் எத்தனை பாலங்கள், சாலைகள், பூங்கா, கலை அறிவியல் கல்லூரி, குடிநீர் திட்டம் என்று ஏராளமான திட்டங்கள் கொடுத்தோம். அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைக்கிறது. அதிமுக திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறக்கிறார் ஸ்டாலின். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் கொரோனா காலம். அது அதிமுக ஆட்சியில். விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது, விலையை கட்டுப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மக்களிடம் கிட்னி திருடிய ஒரே கட்சி திமுக தான். திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்கு மக்கள் யாரும் சென்றுவிட கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
கோயம்புத்தூர்
எஸ். பி. வேலுமணி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image2
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Recommended image3
Now Playing
சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
Related Stories
Recommended image1
அதிகாலையிலேயே தலைநகரை அலறவிடும் அமலாக்கத்துறை! மருத்துவர் தொழிலதிபர் வீட்டில் சோதனை!
Recommended image2
திமுக பெண் நிர்வாகி நீக்கம்! துரைமுருகன் அதிரடி! யார் இந்த பாரதி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved