- Home
- Tamil Nadu News
- தாறுமாறாக குறைந்த தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? கூடை கூடையாக அள்ளும் மக்கள்
தாறுமாறாக குறைந்த தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? கூடை கூடையாக அள்ளும் மக்கள்
சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்த தக்காளி, வெங்காயத்தின் விலை தற்போது சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காய்கறிகளின் விலை என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகள், அதிலும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று, உணவில் சுவையையும் கொடுக்காது. அந்த வகையில் எந்த காய்கறிகளின் விலை உயர்ந்தாலும் கவலைப்படாத மக்கள் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்தால் கலங்கி விடுவார்கள்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையும் 140 ரூபாயை தாண்டியது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தக்காளி, வெங்காயம் விலை நிலவரம்
எனவே வீட்டில் உணவு சமைப்பதில் தக்காளி, வெங்காயத்தை குறைவான அளவே பயன்படுத்தினார்கள். னவே எப்போது தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது குறையும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்கள். எனவே அவர்களுக்காகவே கடந்த சில மாதங்களாகவே தக்காளி, வெங்காயத்தின் வரத்து கிடு கிடுவென அதிகரித்ததால் விலையானது சரிவை சந்தித்துள்ளது. எனவே ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலையானது தற்போது 100 ரூபாய்க்கு 7 முதல் 8 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது தக்காளி விலை என்ன.?
இதே போல வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ 25 முதல் 35 வரை தரத்தை பொறுத்து விற்படையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் போட்டி போட்டு தக்காளி, வெங்காயத்தை கூடை, கூடையாக வாங்கி செல்கிறார்கள்.
இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய் வரைக்கும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கு தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை காய்கறிகள் விலை என்ன.?
பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
குறைந்தது பச்சை காய்கறிகளின் விலை
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும்,
இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது